விரைவில் வருகிறது விஜய் சேதுபதி – திரிஷா நடித்திருக்கும் ‘96’ திரைப்படம்..!

விரைவில் வருகிறது விஜய் சேதுபதி – திரிஷா நடித்திருக்கும் ‘96’ திரைப்படம்..!

ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றி பெற்ற ‘ரோமியோ ஜூலியட்’, விஷால் நடித்த ‘கத்தி சண்டை’ போன்ற  வெற்றிப் படங்களை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான எஸ்.நந்தகோபால்  தயாரித்துள்ள அடுத்தத் திரைப்படம் ‘96’.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார். மற்றும் ஜனகராஜ், தேவதர்ஷினி, ‘ஆடுகளம்’ முருகதாஸ், கவிதாலயா கிருஷ்ணன், பகவதி பெருமாள் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – சண்முகசுந்தரம், இசை – கோவிந்த் மேனன், படத் தொகுப்பு – கோவிந்தராஜ், கலை இயக்கம் – வினோத் ராஜ்குமார், பாடல்கள் – உமாதேவி, கார்த்திக் நேத்தா, தயாரிப்பு – எஸ்.நந்தகோபால், எழுத்து, இயக்கம் – சி.பிரேம்குமார். இவர் ‘பசங்க’,  ‘சுந்தர பாண்டியன்’, ‘ நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். இந்த படதின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியிருக்கிறார்.

_4AM9591   

படம் பற்றி இயக்குநர் சி.பிரேம்குமார் பேசுகையில், “முற்றிலும் மாறுபட்ட ஒரு காதல் கதையாக உருவாக்கி இருக்கிறோம். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி புகைப்பட கலைஞராக நடித்துள்ளார். விஜய் சேதுபதி இதுவரை நடித்த படங்களைவிட இந்த படம் அவரது ரசிகர்களுக்கு பிடித்தமான  ஒரு அனுபவத்தை தரும்.

படத்தின் பாடல்களும், டிரைலரும் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது எங்களுக்கு கிடைத்த வெற்றிதான் படமும் நிச்சயம் வெற்றி அடையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

படத்தின் அனைத்துக் கட்ட பணிகளும் முடிந்து விட்டது. படம் விரைவில் திரைக்கு வர உள்ளது…”  என்றார்

இத்திரைப்படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ்  நிறுவனத்தின் சார்பில் விநியோகஸ்தர் S.S.லலித்குமார் வெளியிடுகிறார்.

 

Our Score