‘ஒன்பதிலிருந்து பத்துவரை’ திரைப்படம் ஜூலை 1-ம் தேதி ரிலீஸ்

‘ஒன்பதிலிருந்து பத்துவரை’ திரைப்படம் ஜூலை 1-ம் தேதி ரிலீஸ்

ஹீரோ மூவிஸ் சார்பில் சி.மணிகண்டன் தயாரித்திருக்கும் புதிய படம் ‘ஒன்பதிலிருந்து பத்துவரை’.

இந்தப் படத்தில் கதிர் ஹீரோவாக நடித்திருக்கிறார். பல மலையாளப் படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கும் ஸ்வப்னா மேனன் இதில் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார். மற்றும் தமிழ்ச்செல்வி மிக முக்கியமான ஒரு கேரக்டரில் நடித்துள்ளார். மேலும் லிவிங்ஸ்டன், அவன் இவன் ராமராஜன், சரவண சுப்பையா, இயக்குநர் ஜெகன், கிரேன் மனோகர் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – ராஜரத்தினம், படத்தொகுப்பு – ஆர்.சுதர்சன், இசை – எம்.கார்த்திக், கலை – ஆர்.கே.விஜயமுருகன், நிர்வாகத் தயாரிப்பு – ஆர்.பி.பாலகோபி, பாடல்கள் – முத்து விஜயன், சண்டை பயிற்சி – வீரா, மக்கள் தொடர்பு – நிகில், லேப் – ஜெமினி, எழுத்து, இயக்கம் – விஜய் சண்முகவேல் அய்யனார், தயாரிப்பு – சி.மணிகண்டன்.

படம் பற்றிப் பேசிய இயக்குநர் விஜய் சண்முகவேல் அய்யனார், “இந்தப் படம் காதல், திரில்லர், காமெடி கலந்த ஒரு கவிதையாக இருக்கும். கால் டாக்சி ஒட்டுனரான ஹீரோ, ரேடியோ ஜாக்கியான ஹீரோயினை தனது காரில் அழைத்துச் செல்கிறார். பயணத்தின்போது, இருவரும் குணாதிசயத்திலும், பழக்க வழக்கத்திலும் முரண்படுகிறார்கள். ஆனால் பின்பு பேசும்போது ஹீரோ தன்னுடைய விசிறி என்பதை தெரிந்து கொள்ளும் ஹீரோயின் இதன் பின்பு அன்பாக பேச, அதை ஹீரோ அவள் தன் மீது காதல் கொண்டுள்ளதாக தவறுதலாக புரிந்து கொள்கிறார்.

இந்த நேரத்தில் சிட்டி போலிஸ் கமிஷ்னர் ஹீரோவை தேடுகிறார் ஒரு ஒரு சீரியல் கொலை விஷயமாக மும்முரமாக தேடுகிறார். இந்த விஷயம் ஹீரோயினுக்கு தெரிய வர.. அவரும் அதிர்ச்சியாகிறார். ஆனால் ஆள் மாறாட்டமாக தான் தேடப்படுகிறோம் என்பதையே அறியாத ஹீரோ தனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று ஹீரோயினிடம் வாதாடுகிறார்.

இப்படி ஏகப்பட்ட சிக்கல்கள், அதிர்ச்சிகளை கலந்து சொல்லும் படம்தான் இந்த ‘ஒன்பதிலிருந்து பத்துவரை’ திரைப்படம். படத்தின் இறுதியில் இருக்கும் மிக, மிக அழகான முடிவு ரசிகர்களின் மனதை நெகிழ வைக்கும். இப்படத்தின் முடிவு நம்மை சிந்திக்க வைத்து பிரமிப்பில் ஆழ்த்தும் என்பது மட்டும் உறுதி.

படத்தை மிக பிரமாண்டமான முறையில் நிறைய செலவுகள் செய்தே எடுத்திருக்கிறோம். படத்தின் தயாரிப்பாளர் கொடுத்த ஒத்துழைப்பினால்தான் இது சாத்தியமானது. படம் வரும் ஜூலை 1-ம் தேதி ரிலீஸாகவுள்ளது..” என்றார்.

Our Score