61-வது பிலிம்பேர் பத்திரிகையின் தென்னக திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நேற்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
கமல்ஹாசன், ஏ.ஆர்.ரஹ்மான், மகேஷ் பாபு, ஹிந்தி நடிகை ரேகா, தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ், முரளி கோபி, சத்யராஜ், சமந்தா, நயன்தாரா, அதர்வா, பூஜாகுமார், தன்ஷிகா, லட்சுமிராய், பாடலாசிரியர் நா.முத்துக்குமார், இயக்குநர் பாலா உள்ளிட்ட பல்வேறு தென்னிந்திய நட்சத்திரங்கள் இதில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் 2013-ம் ஆண்டு வெளி வந்த திரைப்படங்களில் சிறந்தவைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அந்த விருதுப் பட்டியல் இதோ :
வாழ்நாள் சாதனையாளர் விருது – பாலு மகேந்திரா மற்றும் ஜெயபாரதி
தமிழ்
சிறந்த திரைப்படம் – தங்க மீன்கள்
சிறந்த இயக்குனர் – பாலா [பரதேசி]
சிறந்த நடிகர் – அதர்வா [பரதேசி]
சிறந்த நடிகர் (நடுவர்கள் தேர்வு) – தனுஷ் [மரியான்]
சிறந்த நடிகை – நயன்தாரா [ராஜா ராணி]
சிறந்த துணை நடிகர் – சத்யராஜ் [ராஜா ராணி]
சிறந்த துணை நடிகை – தன்சிகா [பரதேசி]
சிறந்த புதுமுக நடிகை – நஸ்ரியா [நேரம்]
சிறந்த புதுமுக நடிகர் – நிவின் பாலி [நேரம்]
சிறந்த ஒளிப்பதிவு – ராஜீவ் மேனன் [கடல்]
சிறந்த இசையமைப்பாளர் – ஏ.ஆர். ரஹ்மான் [கடல்]
சிறந்த பாடலாசிரியர் – நா. முத்துக்குமார் பாடல் : ஆனந்த யாழை [தங்க மீன்கள்]
சிறந்த பாடகி – சக்திஸ்ரீ கோபாலன். ‘நெஞ்சுக்குள்ளே’ [கடல்]
சிறந்த பாடகர் – ஸ்ரீராம் பார்த்தசாரதி. ‘ஆனந்த யாழை’ [தங்க மீன்கள்]
மலையாளம்
சிறந்த திரைப்படம் – த்ரிஷ்யம்
சிறந்த இயக்குனர் – ஷ்யாமா ப்ரசாத் [ஆர்டிஸ்ட்]
சிறந்த நடிகர் – ஃபஹத் ஃபாசில் [நார்த் 24 காதம்]
சிறந்த நடிகை – ஆன் அகஸ்டின் [ஆர்டிஸ்ட்]
சிறந்த துணை நடிகர் – முரளி கோபி [லெஃப்ட் ரைட் லெஃப்ட்]
சிறந்த துணை நடிகை – ஆஷா சரத் [த்ரிஷ்யம்]
சிறந்த நடன அமைப்பு – வி.ஜே. சேகர். ‘டாப் லேஸி பொடி’ [இத்தரம்மாயில தோ]
சிறந்த இசையமைப்பாளர் – ஜெயச்சந்திரன் [செல்லுலாய்ட்]
சிறந்த பாடகி – வைக்கம் விஜயலட்சுமி. ‘ஒட்டக பாடுன்ன’ [நாடன்]
சிறந்த பாடகர் – விஜய் யேசுதாஸ். ‘திரயும் தீரவும்’ [மெமரிஸ்]
சிறந்த பாடலாசிரியர் – மது வாசுதேவ். ‘ஒட்டக பாடுன்ன’ [நாடன்]
கன்னடம்
சிறந்த திரைப்படம் – மைனா
சிறந்த இயக்குனர் – பவன் குமார் [லூசியா]
சிறந்த நடிகர் – ப்ரேம் [சார்மினார்]
சிறந்த நடிகை – அமுல்யா [ஷ்ரவானி சௌப்ரமண்யா]
சிறந்த துணை நடிகர் – அச்யுத் குமார் [லூசியா]
சிறந்த துணை நடிகை – கல்யாணி [ஜெயமன்னா மகா]
சிறந்த இசையமைப்பாளர் – அர்ஜுன் ஜன்யா [பஜரங்கி]
சிறந்த பாடலாசிரியர் – சித்து கொடிபுரா. ‘பனல்லி படலகோ’ [சிம்பல்லக் ஒன்ட் லவ் ஸ்டோரி]
சிறந்த பாடகி – சௌம்யா ராவ். ‘கரடிக பன்னலி’ [சிம்பல்லக் ஒன்ட் லவ் ஸ்டோரி]
சிறந்த பாடகர் – பூர்ண சந்திர தேஜஸ்வி. ‘தின்பேடல் கம்மி’ [லூசியா]
தெலுங்கு
சிறந்த திரைப்படம் – அத்தரின்டிகி தாரெதி
சிறந்த இயக்குனர் – த்ரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் [அத்தரின்டிகி தாரெதி]
சிறந்த நடிகர் – மகேஷ் பாபு [சீதம்மா வாகிட்லோ சிறிமல்லி செட்டு]
சிறந்த நடிகை – நித்யா மேனன் [குண்டே ஜாரி கள்ளந்தயின்டே]
சிறந்த துணை நடிகர் – சுனில் [தடகா]
சிறந்த துணை நடிகை – லக்ஷ்மி மஞ்சு [குண்டேல்லோ கோதாரி]
சிறந்த இசையமைப்பாளர் – தேவி ஸ்ரீ பிரசாத் [அத்தரின்டிகி தாரெதி]
சிறந்த பாடலாசிரியர் – ஸ்ரீமணி. ‘ஆர்டுகுல’ [அத்தரின்டிகி தாரெதி]
சிறந்த பாடகி – சித்ரா. ‘சீதம்மா வாகிட்லோ சிறிமல்லி செட்டு’
சிறந்த பாடகர் – கைலாஷ் கேர். ‘பண்டகல’ [மிர்ச்சி]