இவருடைய இயக்கத்தில் நடிக்க மாட்டோமா என்று நடிகைகள் தவமாய் தவம் கிடக்கும் நேரத்தில் வலிய வந்த வாய்ப்பை மறுத்திருக்கிறார் நடிகை சமந்தா.
தெலுங்குலகின் ஹாட்டஸ்ட் இயக்குநரான எஸ்.எஸ்.ராஜமெளலிதான் அந்த இயக்குநர். இவர் தற்போது இயக்கி வரும் ‘பாகுபாலி’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க சமந்தாவைத்தான் அழைத்தாராம் ராஜமெளலி. ஆனால் தேதி இல்லை என்று கூறி மறுத்துவிட்டாராம் சமந்தா.
இது பற்றி மிகுந்த வருத்தத்துடன் தனது ட்வீட்டரில் இப்படி குறிப்பிட்டிருக்கிறார் ராஜமெளலி.
“Why are you doing this Sam? When I personally requested you for a special role. you said you had no dates. Now you are driving your fans against me…”
இது தெலுங்கு படவுலகினரை மிகுந்த அதிர்ச்சியாக்கியிருக்கிறது. ஏனெனில் இதற்கு முந்தைய ராஜமெளலியின் படமான ‘நான் ஈ’ படத்தில் சமந்தாதான் ஹீரோயின். இந்தப் படம் மூலமாகத்தான் தமிழ்நாட்டிலும் மிக பிரபலமானார் சமந்தா. தெலுங்கிலும் இவரது மார்க்கெட் சூடு பிடித்தது.
சமந்தா இந்த வாய்ப்பை ஏன் நிராகரித்தார் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது. இ்பபோது சமந்தா நடிக்க வேண்டிய அந்த கதாபாத்திரத்தில் தமன்னா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.