Bamboo Trees Productions சார்பில் T. ஜீவிதா கிஷோர் தயாரிப்பில், பிரபல நடன இயக்குநர் சாண்டி நாயகனாக நடித்திருக்கும் படம் ‘3:33’.
எழுத்து & இயக்கம் – நம்பிக்கை சந்துரு, ஒளிப்பதிவு – சதீஷ் மனோகரன், இசை – ஹர்ஷவர்தன் ரமேஷ்வர், படத்தொகுப்பு – தீபக் S. துவாரகநாத், VFX சூப்பரவைசர் – அருண், ஸ்டண்ட் – ஸ்டன்னர் ஷாம், மிக்சிங் – ராம்ஜி சோமா, SFX – A.சதீஷ்குமார், மக்கள் தொடர்பு – சதீஷ் ( AIM ), விளம்பர வடிவமைப்பு – SABA DESIGNS.
தமிழ் சினிமாவில் முதல் முறையாக நேரத்தை வில்லனாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியிருக்கிறது.
இந்தப் படம் சென்ற வாரம்தான் தமிழகத்தில் வெளியானது. தமிழகம் முழுவதும் குறைந்தப்பட்ச தியேட்டர்களில் மட்டுமே இத்திரைப்படம் வெளியாகியிருந்தது. அதுவும் தினமும் ஒரு காட்சி என்ற வீதத்தில்தான் தியேட்டர்கள் கிடைத்திருந்தன.
ஆனால் தற்போது இந்தப் படத்தைத் தயாரித்த பட நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் இந்தப் படத்தைத் தயாரித்த செலவுத் தொகை தியேட்டர் வசூல் மூலமாகவே கிடைத்துவிட்டதாக தெரிவித்திருக்கிறார்கள்.

இது எப்படி சாத்தியம் என்று தற்போது தமிழ்த் திரையுலகத்தில் பெரும் சர்ச்சைகள் கிளம்பியுள்ளன.
ஏனெனில் இத்திரைப்படம் திரையிட்ட திரையரங்குகளில் வசூல் குறைவாக இருந்ததால் முதல் நாளே பல ஊர்களில் இந்தப் படத்தைத் தியேட்டர்களில் இருந்து தூக்கிவிட்டதாக செய்திகள் வந்து கொண்டிருந்தன. இந்த நிலையில் இப்படியொரு அறிவிப்பை இந்தப் பட நிறுவனம் அறிவித்திருப்பது சந்தேகத்தை அளிக்கிறது..!
சமூக வலைத்தளங்களில் இது குறித்து கருத்து சொல்லி வரும் சினிமா ரசிகர்கள், “எந்தெந்த தியேட்டர்களில் இருந்து எவ்வளவு வசூல் வந்தது என்பதை இந்தப் படத்தின் தயாரிப்பாளர் வெளிப்படையாக தெரிவிப்பாரா..?” என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.









