full screen background image

2025-ம் வருட திரைப்படங்களுக்கான உண்மைத் தமிழன் திரைப்பட விருதுகள்…! 

2025-ம் வருட திரைப்படங்களுக்கான உண்மைத் தமிழன் திரைப்பட விருதுகள்…! 

2025-ம் ஆண்டு வெளியான 289 தமிழ்த் திரைப்படங்களில் 6 திரைப்படங்கள் ஓடிடி தளங்களிலும், மீதமுள்ள 283 திரைப்படங்கள் திரையரங்குகளிலும் வெளியாகியுள்ளன.

நாம் இதுவரையிலும் கடந்த 13 வருடங்களாக வெளியிட்டிருக்கும் உண்மைத்தமிழன் விருதுகளில் தியேட்டர்களில் வெளியான படங்களை மட்டுமே கணக்கில் கொண்டுள்ளோம்.

இந்த வருடமும் அதேபோல் ஓடிடி, மற்றும் தொலைக்காட்சிகளில் நேரடியாக வெளியான படங்களைக் கணக்கில் எடுக்காமல் தியேட்டர்களில் மட்டும் வெளியான  படங்களில் நாம் பார்த்தவரையிலும் சிறந்த படைப்பாளிகளை, நடிகர், நடிகைகளை. தொழில் நுட்பக் கலைஞர்களைத் தேர்வு செய்துள்ளோம்.

எப்போதும்போல இந்தாண்டும் சிறந்த கலைஞர்களையும், திரைப்படங்களையும் தேர்வு செய்வது மிகக் கடினமாக இருந்தது. பல்வேறு விஷயங்களையும் சீர்தூக்கிப் பார்த்து, நடுநிலைமை தவறாமல், யார், எவர் என்றெல்லாம் யோசிக்காமல்தான் 2025-ம் ஆண்டிற்கான சிறந்த திரைப்படங்களையும், கலைஞர்களும் தேர்வு செய்திருக்கிறோம்..!

இதில் விடுபட்டுப் போன நல்ல, திறமையான கலைஞர்களும், படங்களும் இருக்கத்தான் செய்கின்றன. மயிரிழையில் மில்லி செகண்ட் இடைவெளியில் அவைகள் விடுபட்டிருக்கின்றன. அந்தப் படைப்பாளிகளும், கலைஞர்களும் அடுத்தடுத்து இதைவிடவும் மிகச் சிறந்த படைப்புகளை படைத்து தங்களை நிரூபிப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறோம்..!

வெற்றி பெற்ற அனைத்துக் கலைஞர்களுக்கும் நமது இணையத்தளத்தின் வாசகர்கள் சார்பாகவும், தமிழ்ச் சினிமாவின் தீவிர ரசிகர்கள் சார்பாகவும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்..! 

2025-ம் ஆண்டின் சிறந்த திரைப்படங்களுக்கான உண்மைத்தமிழன் விருதுகள்..!

  1. சிறந்த திரைப்படம் – முதல் பரிசு – கெவி
  2. சிறந்த திரைப்படம் – இரண்டாம் பரிசு – தண்டகாரண்யம்
  3. சிறந்த திரைப்படம் – மூன்றாம் பரிசு – பாட்டல் ராதா
  4. சிறந்த நகைச்சுவை திரைப்படம் – டூரிஸ்ட் பேமிலி
  5. சிறந்த பேய் படம் – ஹவுஸ்மேட்ஸ்
  6. சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் – பறந்து போ
  7. சிறந்த இயக்குநர் – அதியன் ஆதிரை (தண்டகாரண்யம்)
  8. சிறந்த இயக்குநர்– சிறப்பு விருது – மாரி செல்வராஜ் (பைசன்)
  9. சிறந்த புதுமுக இயக்குநர் – தமிழ் தயாளன் (கெவி)
  10. சிறந்த புதுமுக இயக்குநர் – சிறப்பு விருது – தினகரன் சிவலிங்கம்(பாட்டல் ராதா)
  11. சிறந்த கதை – தமிழ் தயாளன் (கெவி)
  12. சிறந்த கதை – சிறப்பு விருது – அதியன் ஆதிரை (தண்டகாரண்யம்)
  13. சிறந்த திரைக்கதை – தமிழ் தயாளன்(கெவி)
  14. சிறந்த திரைக்கதை – சிறப்பு விருது – கெளதமன் கணபதி (சரண்டர்)
  15. சிறந்த வசனம் – வெண்பா கதிரேசன் (நாளை நமதே)
  16. சிறந்த வசனம் – சிறப்பு விருது – ஒத்த ஓட்டு முத்தையா
  17. சிறந்த நடிகர் – கலையரசன் (தண்டகாரண்யம்)
  18. சிறந்த நடிகர்– சிறப்பு விருது – துருவ் விக்ரம் (பைசன்)
  19. சிறந்த புதுமுக நடிகர் – ஆதவன் (கெவி)
  20. சிறந்த புதுமுக நடிகர் – சிறப்பு விருது – ஹரீஷ் (வெள்ள குதிரை)
  21. சிறந்த புதுமுக நடிகை – மதுமிதா (நாளை நமதே)
  22. சிறந்த புதுமுக நடிகை – சிறப்பு விருது – மீனாட்சி தினேஷ் (லவ் மேரேஜ்)
  23. சிறந்த நடிகை – ஐஸ்வர்யா லஷ்மி (மாமன்)
  24. சிறந்த நடிகை – சிறப்பு விருது – சுவாசிகா (மாமன்)
  25. சிறந்த துணை நடிகர் – சரத்குமார் (3 பிஹெச்கே)
  26. சிறந்த துணை நடிகர் – சிறப்பு விருது – குரு சோமசுந்தரம் (பாட்டல் ராதா, குடும்பஸ்தன்)
  27. சிறந்த துணை நடிகை – அனுமோல் (காயல்)
  28. சிறந்த துணை நடிகை – சிறப்பு விருது – கீதா கைலாசம் (அங்கம்மாள்)
  29. சிறந்த குணச்சித்திர‌ நடிகர் – காளி வெங்கட் (மெட்ராஸ் மேட்னி)
  30. சிறந்த குணச்சித்திர நடிகர் சிறப்பு விருது –  பாலாஜி சக்திவேல் (காந்தி கண்ணாடி)
  31. சிறந்த குணச்சித்திர‌ நடிகை – சரண்யா பொன்வண்ணன் (பன் பட்டர் ஜாம்)
  32. சிறந்த குணச்சித்திர நடிகை சிறப்பு விருது – ரமா (TRAUMA)
  33. சிறந்த வில்லன் நடிகர் – செல்வராகவன் (பல்டி)
  34. சிறந்த வில்லன் நடிகர் சிறப்பு விருது – செளபிர் (கூலி)
  35. சிறந்த வில்லி – ஆண்ட்ரியா (mask)
  36. சிறந்த வில்லி – சிறப்பு விருது – காயத்ரி (கலன்)
  37. சிறந்த நகைச்சுவை நடிகர் – சந்தானம் (மதகஜராஜா)
  38. சிறந்த நகைச்சுவை நடிகர் சிறப்பு விருது – மிர்ச்சி சிவா (பறந்து போ)
  39. சிறந்த நகைச்சுவை நடிகை – தேவதர்ஷிணி (பன் பட்டர் ஜாம்)
  40. சிறந்த நகைச்சுவை நடிகை சிறப்பு விருது – கிரேஸ் ஆண்டனி (பறந்து போ)
  41. சிறந்த குழந்தை நட்சத்திரம் (ஆண்) – மிதுல் ரியான் (பறந்து போ)
  42. சிறந்த குழந்தை நட்சத்திரம் (ஆண்) – சிறப்பு விருது – மாஸ்டர் ஹென்ரிக் (ஹவுஸ் மேட்ஸ்)
  43. சிறந்த குழந்தை நட்சத்திரம் (பெண்) – நிஹாரிகா (நிழற்குடை)
  44. சிறந்த குழந்தை நட்சத்திரம் (பெண்) – சிறப்பு விருது – பூமிகா (வல்லமை)
  45. சிறந்த ஒளிப்பதிவு – ஜெகன் ஜெயசூர்யா (கெவி)
  46. சிறந்த படத் தொகுப்பு – ஹரி குமரன் (கெவி)
  47. சிறந்த ஒலிப்பதிவு – டி.உதயகுமார் (சப்தம்)
  48. சிறந்த ஒலிக் கலவை – Sync Cinema(சப்தம்)
  49. சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ் – (கஜானா)
  50. சிறந்த நடன இயக்கம் – எம்.ஷெரீப் – கனிமா (ரெட்ரோ)
  51. சிறந்த சண்டை இயக்கம் – Kecha Khamphakdee(ரெட்ரோ)
  52. சிறந்த கலை இயக்கம் – ஜாக்கி, மாயப்பாண்டி (ரெட்ரோ)
  53. சிறந்த ஆடை வடிவமைப்பு – அம்ரிதா ராம் (தக் லைப்)
  54. சிறந்த ஒப்பனையாளர் – Akihito Ikeda (தக் லைப்)
  55. சிறந்த பின்னணி இசை – சஞ்சய் மாணிக்கம் (ஜென்ம நட்சத்திரம்)
  56. சிறந்த பாடல் இசையமைப்பாளர் – யுவன் சங்கர்ராஜா (அகத்தியா)
  57. சிறந்த பாடலாசிரியர் – பா.விஜய் (செம்மண்ணுதானே – அகத்தியா)
  58. சிறந்த டூயட் பாடல் – அச்சம் நாணம் விட்டுப் போக(படவா)
  59. சிறந்த ஜனரஞ்சகப் பாடல் – அங்கிலி பிங்கிலி (2கே லவ் ஸ்டோரி)
  60. சிறந்த சோகப் பாடல்– உசுரே உசுரே (உசுரே)
  61. சிறந்த பின்னணி பாடகர் – கபில் கபிலன் (உசுரே உசுரே – உசுரே)
  62. சிறந்த பின்னணி பாடகி – மானசி (செம்மண்ணுதானே – அகத்தியா)
  63. சிறந்த டிரெய்லர் – மார்கன்

தேர்வுகள் பற்றிய கருத்துகள், விமர்சனங்கள், அர்ச்சனைகள், பொங்கல்கள் அனைத்தும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்றன..!

Our Score