full screen background image

2023-ம் ஆண்டிற்கான உண்மைத் தமிழன் திரைப்பட விருதுகள்…! 

2023-ம் ஆண்டிற்கான உண்மைத் தமிழன் திரைப்பட விருதுகள்…! 

சென்ற 2023-ம் ஆண்டில் தியேட்டர்களில் மட்டும் 242 படங்களும், ஓடிடி மற்றும் தொலைக்காட்சிகளில் நேரடியாக 8 படங்களும் வெளியாகியுள்ளன.

நாம் இதுவரையிலும் கடந்த 10 வருடங்களாக வெளியிட்டிருக்கும் உண்மைத்தமிழன் விருதுகளில் தியேட்டர்களில் வெளியான படங்களை மட்டுமே கணக்கில் கொண்டுள்ளோம்.

இந்த வருடமும் அதேபோல் ஓடிடி, மற்றும் தொலைக்காட்சிகளில் நேரடியாக வெளியான படங்களைக் கணக்கில் எடுக்காமல் தியேட்டர்களில் மட்டும் வெளியான 242 படங்களில் நாம் பார்த்தவரையிலும் சிறந்த படைப்பாளிகளை, நடிகர், நடிகைகளை. தொழில் நுட்பக் கலைஞர்களைத் தேர்வு செய்துள்ளோம்.

எப்போதும்போல இந்தாண்டும் சிறந்த கலைஞர்களையும், திரைப்படங்களையும் தேர்வு செய்வது மிகக் கடினமாக இருந்தது. பல்வேறு விஷயங்களையும் சீர்தூக்கிப் பார்த்து, நடுநிலைமை தவறாமல், யார், எவர் என்றெல்லாம் யோசிக்காமல்தான் 2023-ம் ஆண்டிற்கான சிறந்த திரைப்படங்களையும், கலைஞர்களும் தேர்வு செய்திருக்கிறோம்..!

இதில் விடுபட்டுப் போன நல்ல, திறமையான கலைஞர்களும், படங்களும் இருக்கத்தான் செய்கின்றன. மயிரிழையில் மில்லி செகண்ட் இடைவெளியில் அவைகள் விடுபட்டிருக்கின்றன. அந்தப் படைப்பாளிகளும், கலைஞர்களும் அடுத்தடுத்து இதைவிடவும் மிகச் சிறந்த படைப்புகளை படைத்து தங்களை நிரூபிப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறோம்..!

வெற்றி பெற்ற அனைத்துக் கலைஞர்களுக்கும் நமது இணையத்தளத்தின் வாசகர்கள் சார்பாகவும், தமிழ்ச் சினிமாவின் தீவிர ரசிகர்கள் சார்பாகவும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்..! 

2023-ம் ஆண்டின் சிறந்த திரைப்படங்களுக்கான உண்மைத்தமிழன் விருதுகள்..!

 

  1. சிறந்த திரைப்படம்முதல் பரிசுவிடுதலை – 1
  2. சிறந்த திரைப்படம்இரண்டாம் பரிசுமாமன்னன்
  3. சிறந்த திரைப்படம்மூன்றாம் பரிசு – சித்தா
  4. சிறந்த நகைச்சுவை திரைப்படம் – ஆயிரம் பொற்காசுகள்
  5. சிறந்த பேய் படம்டிடி ரிட்டர்ன்ஸ்
  6. சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம்மார்க் ஆண்டனி
  7. சிறந்த இயக்குநர்வெற்றிமாறன்விடுதலை-1
  8. சிறந்த இயக்குநர்– சிறப்பு விருது மாரி செல்வராஜ்மாமன்னன்
  9. சிறந்த புதுமுக இயக்குநர் –  மந்திரமூர்த்திஅயோத்தி
  10. சிறந்த புதுமுக இயக்குநர்சிறப்பு விருது ஷான் பொம்மை நாயகி
  11. சிறந்த கதைவெற்றிமாறன்விடுதலை-1
  12. சிறந்த கதைசிறப்பு விருதுமாரி செல்வராஜ்மாமன்னன்
  13. சிறந்த திரைக்கதைஆதிக் ரவிச்சந்திரன்மார்க் ஆண்டனி
  14. சிறந்த திரைக்கதைசிறப்பு விருது சி.யு.அருண் குமார்சித்தா
  15. சிறந்த வசனம்மாரி செல்வராஜ் மாமன்னன்
  16. சிறந்த வசனம்சிறப்பு விருதுமு.களஞ்சியம்முந்திரிக்காடு
  17. சிறந்த நடிகர் – வடிவேலு மாமன்னன்  
  18. சிறந்த நடிகர்– சிறப்பு விருது –  சமுத்திரக்கனிதலைக்கூத்தல்
  19. சிறந்த புதுமுக நடிகர்வெங்கட் செங்குட்டுவன்மதிமாறன்
  20. சிறந்த புதுமுக நடிகர்சிறப்பு விருது புகழ்முந்திரிக்காடு
  21. சிறந்த புதுமுக நடிகைபானுஸ்ரீவிடுதலை-1
  22. சிறந்த புதுமுக நடிகைசிறப்பு விருது சுபபிரியா முந்திரிக்காடு
  23. சிறந்த நடிகைஐஸ்வர்யா ராஜேஷ்தி கிரேட் இந்தியன் கிச்சன், பர்ஹானா
  24. சிறந்த நடிகைசிறப்பு விருது அபர்ணா தாஸ்டாடா
  25. சிறந்த துணை நடிகர்காளி வெங்கட்ஹர்ஹாரா, பீட்சா-3, கிடா                                                     
  26. சிறந்த துணை நடிகர்சிறப்பு விருது ஆடுகளம் முருகதாஸ்ராஜாமகள்
  27. சிறந்த துணை நடிகைரோகிணிதண்டட்டி
  28. சிறந்த துணை நடிகைசிறப்பு விருதுஅபர்ணதிஇறுகப்பற்று
  29. சிறந்த குணச்சித்திரநடிகர்எம்.எஸ்.பாஸ்கர்பார்க்கிங், மதிமாறன்
  30. சிறந்த குணச்சித்திர நடிகர் சிறப்பு விருது –  சார்லி எறும்பு, டி-3
  31. சிறந்த குணச்சித்திரநடிகை – வசுந்தராதலைக்கூத்தல் 
  32. சிறந்த குணச்சித்திர நடிகை சிறப்பு விருது – அனுபமா குமார்N4
  33. சிறந்த வில்லன் நடிகர்பகத் பாசில்மாமன்னன்
  34. சிறந்த வில்லன் நடிகர் சிறப்பு விருதுமிஷ்கின் மாவீரன்
  35. சிறந்த வில்லிசுனைனாரெஜினா
  36. சிறந்த வில்லிசிறப்பு விருதுலயாபகாசுரன்
  37. சிறந்த நகைச்சுவை நடிகர்சந்தானம்டிடி ரிட்டர்ன்ஸ்
  38. சிறந்த நகைச்சுவை நடிகர் சிறப்பு விருதுயோகிபாபுகுய்கோ
  39. சிறந்த நகைச்சுவை நடிகைகோவை சரளாகிக்
  40. சிறந்த நகைச்சுவை நடிகை சிறப்பு விருதுதீபாடிடி ரிட்டர்ன்ஸ், சொப்னசுந்தரி
  41. சிறந்த குழந்தை நட்சத்திரம்சஹஷ்ராஸ்ரீசித்தா
  42. சிறந்த குழந்தை நட்சத்திரம்சிறப்பு விருதுஸ்ரீமதிபொம்மை நாயகி
  43. சிறந்த ஒளிப்பதிவு.எம்.எட்வின் சகாய் அஸ்வின்ஸ்
  44. சிறந்த படத் தொகுப்புவிஜய் வேலுக்குட்டிமார்க் ஆண்டனி
  45. சிறந்த ஒலிப்பதிவுசச்சின்ஹரிஅஸ்வின்ஸ்
  46. சிறந்த ஒலிக் கலவைசச்சின்ஹரிஅஸ்வின்ஸ்
  47. சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ்NYVFXWALLAHபொன்னியின் செல்வன்-2
  48. சிறந்த நடன இயக்கம்பிருந்தாபொன்னியின் செல்வன்-2
  49. சிறந்த சண்டை இயக்கம்அன்பறிவ்லியோ
  50. சிறந்த கலை இயக்கம்தோட்டா தரணிபொன்னியின் செல்வன்-2
  51. சிறந்த ஆடை வடிவமைப்புஏகோ லகானிபொன்னியின் செல்வன்-2
  52. சிறந்த ஒப்பனையாளர்விக்ரம் கெய்க்வாட்பொன்னியின் செல்வன்-2
  53. சிறந்த பின்னணி இசைகவாஸ்கர் அவினாஷ்மெமரீஸ்
  54. சிறந்த பாடல் இசையமைப்பாளர்இசைஞானி இளையராஜாபிடிச்சிருக்காமார்கழி திங்கள்
  55. சிறந்த பாடலாசிரியர்இசைஞானி இளையராஜாபிடிச்சிருக்காமார்கழி திங்கள்
  56. சிறந்த டூயட் பாடல்பிடிச்சிருக்காமார்கழி திங்கள்
  57. சிறந்த ஜனரஞ்சகப் பாடல்அதிருதாமார்க் ஆண்டனி
  58. சிறந்த சோகப் பாடல்கண்மணியே கண்ணீரை நிறுத்துஅழகிய கண்ணே
  59. சிறந்த பின்னணி பாடகர்ராஜகணபதிபிடிச்சிருக்காமார்கழி திங்கள்
  60. சிறந்த பின்னணி பாடகிஅனன்யா பட்பிடிச்சிருக்காமார்கழி திங்கள்
  61. சிறந்த டிரெய்லர்கொலை

தேர்வுகள் பற்றிய கருத்துகள்விமர்சனங்கள்அர்ச்சனைகள்பொங்கல்கள் அனைத்தும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்றன..!

Our Score