கொரோனாவால் தியேட்டர்களில் கூட்டம் வருமா.. வராதா.. என்ற சந்தேகத்தினால்தான் மிகப் பெரிய பட்ஜெட் படங்கள் தியேட்டர்களுக்கு வராமலேயே காத்துக் கிடந்தன.
ஆனால், இந்த ஆண்டு பொங்கல் தினத்தன்று திரைக்கு வந்த ‘மாஸ்டர்’ படத்தின் வெற்றி பெரும் வெற்றியைக் கண்டுவிட்டதினால் அடுத்தடுத்து தேங்கி நிற்கும் அனைத்து பெரிய பட்ஜெட் படங்களையும் இந்தாண்டு திரைக்குக் கொண்டு வரும் முயற்சிகள் நடந்து வருகின்றன.
இந்த வரிசையில் விஷால் நடித்துள்ள ‘சக்ரா’ திரைப்படம் பிப்ரவரி 12-ம் தேதியும், தனுஷ் நடித்துள்ள ‘கர்ணன்’ படம் பிப்ரவரி 19-ம் தேதியும், ராணா, விஷ்ணு விஷால் நடித்துள்ள ‘காடன்’ படம் மார்ச் 26-ம் தேதியும், சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘டாக்டர்’ படம் ஏப்ரல் 4-ம் தேதியும் திரைக்கு வரத் தயாராக உள்ளன.
மேலும், விக்ரம் நடித்துள்ள ‘கோப்ரா’ திரைப்படம் மே 13-ம் தேதியும், கார்த்தியின் ‘சுல்தான்’ படம் ஏப்ரல் 2-ம் தேதியும், விஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’ படம் ஏப்ரல் 14-ம் தேதியும், சிம்புவின் ‘மாநாடு’ படம் மே 13-ம் தேதியும், யாஷ் நடித்துள்ள ‘கே.ஜி.எஃப்.’ படம் ஜூலை 30-ம் தேதியும் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவே எதிர்பார்க்கும் திரைப்படமான இயக்குநர் ராஜமெளலியின் ‘ஆர்.ஆர்.ஆர்.’ படம் அக்டோபர் 13-ம் தேதியும், ரஜினியின் ‘அண்ணாத்த’ நவம்பர் 4-ம் தேதியும், சிவகார்த்த்திகேயனின் ‘அயலான்’ டிசம்பர் 24-ம் தேதியும் திரைக்கு வரும் என்று இப்போதே அறிவிக்கப்பட்டுள்ளது.









