full screen background image

2021-ம் ஆண்டிற்கான 69-வது தேசிய திரைப்பட விருதுகள் : முழு பட்டியல்

2021-ம் ஆண்டிற்கான 69-வது தேசிய திரைப்பட விருதுகள் : முழு பட்டியல்

69-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் இன்றைக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.

டெல்லியின் நேஷனல் மீடியா சென்டரில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தேர்வுக் குழுவினர் விருதாளர்களின் பெயர்களை அறிவித்துள்ளனர்.

69-ஆவது தேசிய திரைப்பட விருதுகளை பொறுத்தவரை, 2021-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் டிசம்பர் 31-ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் சென்சார் செய்யப்பட்டு வெளியான படங்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ராஜமவுலியின் ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம் 2022-ஆம் ஆண்டு வெளியானாலும், 2021-ம் ஆண்டு நவம்பர் மாதமே இப்படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தது. இதனால் இப்படமும் 2021-ம் ஆண்டின் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

இதில், சிறந்த படத்துக்கான விருதை ‘ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்’ வென்றுள்ளது.

சிறந்த தமிழ்ப் படத்துக்கான விருதை ‘கடைசி விவசாயி’ படம் பெற்றுள்ளது.

ஸ்பெஷல் மென்ஷன்: ‘கடைசி விவசாயி’ படத்துக்காக மறைந்த நடிகர் நல்லாண்டிக்கு ஸ்பெஷல் மென்ஷனில் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல ‘ஹோம்’ படத்துக்காக இந்திரன்ஸுக்கும் இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

69-ஆவது தேசிய திரைப்பட விருதுகளின் பட்டியல் :

சிறந்த திரைப்படம்: ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் (இந்தி)

சிறந்த தமிழ் திரைப்படம்: கடைசி விவசாயி

சிறந்த பிரபலமான திரைப்படம்: ஆர்.ஆர்.ஆர்.

சிறந்த இயக்குநர்: நிகில் மஹாஜன் (தி ஹோலி வாட்டர் – மாராத்தி)

சிறந்த தேசிய ஒருமைப்பாட்டு திரைப்படம் (National integration: தி காஷ்மீர் ஃபைல்ஸ்

சிறந்த இந்தி திரைப்படம்: சர்தார் உத்தம்

சிறந்த குஜராத்தி திரைப்படம்: செல்லோ ஷோ

சிறந்த கன்னட திரைப்படம்: 777 சார்லி

சிறந்த மராத்தி திரைப்படம்: ஏக் தா காய்சாலா

சிறந்த மலையாள திரைப்படம்: ஹோம்

சிறந்த நடிகர்: அல்லு அர்ஜூன் (புஷ்பா)

சிறந்த நடிகர் (பெண்): ஆலியா பட் (கங்குபாய் காத்தியவாடி), கீர்த்தி சனோன் (மிமி)

சிறந்த உறுதுணை நடிகர் (ஆண்): பங்கஜ் திரிபாதி (மிமி)

சிறந்த துணை நடிகர் (பெண்): பல்லவி ஜோஷி (தி காஷ்மீர் ஃபைல்ஸ்)

சிறந்த குழந்தை நட்சத்திரம்: பாவின் ரபாரி (செல்லோ ஷோ)

சிறந்த பின்னணி பாடகர் (ஆண்): காலபைரவா ‘கோமுரம் பீமடு’ (ஆர்ஆர்ஆர்)

சிறந்த பின்னணி பாடகர் (பெண்): ஸ்ரேயா கோஷல் ‘மாயவா சாயவா’ (இரவின் நிழல்)

சிறந்த ஒளிப்பதிவாளர்: அவிக் முகோபாத்யாயா (சர்தார் உதம்)

சிறந்த தழுவல் திரைக்கதை எழுத்தாளர்: சன்ஜய் லீலா பன்சாலி, உட்டர்காஷினி (கங்குபாய் காத்தியவாடி)

சிறந்த திரைக்கதை எழுத்தாளர்: ஷாயி கபீர் (நயாட்டு)

சிறந்த படத்தொகுப்பு: சன்ஜய் லீலா பன்சாலி (கங்குபாய் காத்தியாவாடி)

சிறந்த பின்னணி இசை: எம்.எம்.கீரவாணி (ஆர்.ஆர்.ஆர்.)

சிறந்த ஒப்பனை கலைஞர்: பிரித்தீ சிங் (கங்குபாய் காத்தியாவாடி)

சிறந்த இசையமைப்பாளர்: தேவிஸ்ரீ பிரசாத் (புஷ்பா)

சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட்: ஸ்ரீனிவாஸ் மோகன் (ஆர்.ஆர்.ஆர்.)

சிறந்த நடன இயக்குநர்: ப்ரேம் ரக்‌ஷித் (ஆர்.ஆர்.ஆர்.)

சிறந்த தெலுங்கு படம்: உப்பெனா

சிறந்த சண்டைக் கலைஞர்: கிங் சாலமன் (ஆர்.ஆர்.ஆர்.)

பி.லெனின் இயக்கிய சிறந்த கல்வி திரைப்படமாக ‘சிற்பங்களின் சிற்பங்கள்’ திரைப்படத்துக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

‘கருவறை’ என்ற ஆவணப் படத்துக்காக இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Our Score