2021-ம் வருடத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான இன்றைக்கு
1. மீண்டும்
2. தீர்ப்புகள் விற்கப்படும்
3. சில்லாட்டா
4. பிளான் பண்ணி பண்ணணும்
5. வேலன்
6. லேபர்
7. மதுரை மணிக்குறவர்
8. தண்ணி வண்டி
9. ஒபாமா உங்களுக்காக
10. சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை
11. ஓணம்
12. காட்டுப்புறா
13. இ.பி.கோ. 302
14. தமிழ் ராக்கர்ஸ்
ஆகிய 14 திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.
இவற்றுக்கெல்லாம் தமிழகம் முழுவதுமே இரட்டை எண்ணிக்கை மற்றும் ஒற்றை எண்ணிக்கையில்தான் தியேட்டர்கள் கிடைத்திருக்கின்றன. அதிலும் ஒரு தியேட்டரில் ஒரு காட்சி என்ற வீதத்தில்தான் படங்கள் வெளியாகியுள்ளன.
வருடக் கடைசி என்பதாலும், இதற்கு மேல் காத்திருக்க முடியாது என்பதாலும் தமிழக அரசு வழங்கும் மானியத் தொகையையாவது வாங்கிவிடலாமே என்பதால்தான் குறைந்தபட்சம் 7 தியேட்டர்கள் என்பதைக் கணக்கில் கொண்டு இத்திரைப்படங்கள் கடைசி நாளில் களம் இறங்கியிருக்கின்றன.