2016-ல் மறைந்த கலைஞர்கள்

2016-ல் மறைந்த கலைஞர்கள்

2016-ம் ஆண்டில் எதிர்பார்த்த பல படங்களின் தோல்வி ஒரு பக்கம் இருந்தாலும், தமிழ்த் திரையுலகிற்கு ஏராளமான பங்களிப்புகளை வழங்கிய சாதனையாளர்களையும் பறித்துக் கொண்டது.

சினிமா, அரசியல் இரண்டிலும் ஜெயித்து காட்டிய முதல்வர் ஜெ.ஜெயலலிதா, வழக்கறிஞராக, நாடக - திரைப்பட நடிகராக, வசனகர்த்தாவாக, பத்திரிகையாளராக என பன்முகத் திறன் படைத்த நடிகர், பத்திரிகையாளர், எழுத்தாளர் சோ, பல வெற்றிப் படங்களை தயாரித்த தயாரிப்பாளர், கவிஞர் பஞ்சு அருணாசலம், இசையுலகில் தனக்கென ஒரு சாம்ராஜ்ஜியம் நடத்திய கர்நாடக இசைக் கலைஞர் பாலமுரளிகிருஷ்ணா, தமிழ் திரையுலகிற்கு பெருமை சேர்த்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார், பாடலாசிரியர் அண்ணாமலை, திரைப்பட ஆராய்ச்சியாளர் ‘கலைமாமணி’ பிலிம் நியூஸ் ஆனந்தன், நடிகர்கள் கலாபவன் மணி, குமாரிமுத்து, கே.என்.காளை, பிரதீப் சக்தி, செல்வகுமார், சாய் பிரசாத், நடிகைகள் ஜோதிலட்சுமி, கல்பானா, சப்ரனா, இயக்குநர்கள் ஏ.சி.திரிலோகசந்தர், கே.சுபாஷ், பி.ஆர்.தேவராஜ், பாலு ஆனந்த், வியட் நாம் வீடு சுந்தரம், சசிசங்கர், தயாரிப்பாளர்கள் சித்ரா ராமு, திருப்பூர் மணி, டி.எஸ்.சேதுராமன், வேலாயுதம், பாடலாசிரியர் காளிதாசன், அண்ணாமலை, பின்னணி பாடகிகள் ஆண்டாள், ஷான், ஒளிப்பதிவாளர் ஆனந்தகுட்டன், எடிட்டர் சுந்தரம் என பலரை நாம் இழந்திருக்கிறோம்.