full screen background image

ரஜினி-ஷங்கர் கூட்டணியின் ‘2.0’ படத்தின் பர்ஸ்ட்லுக் மும்பையில் வெளியிடப்படுகிறது..!

ரஜினி-ஷங்கர் கூட்டணியின் ‘2.0’ படத்தின் பர்ஸ்ட்லுக் மும்பையில் வெளியிடப்படுகிறது..!

லைகா புரொடெக்சன்ஸின் பெருமைக்குரிய பிரம்மாண்டமான படைப்பு, ஷங்கரின் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடிக்கும் ‘2.0’ திரைப்படம்.

‘2.0’ திரைப்படம், இந்தியத் திரையுலகமே ஆர்வத்தோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பிரம்மாண்டமான படம். லைகா புரொடெக்சன்ஸின் மிக பிரம்மாண்டமான தயாரிப்பு, ஷங்கரின் புத்திசாலிதனத்துடன் கூடிய பிரமிப்பூட்டும் இயக்கம், சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஸ்டைல் மந்திரம், அக்‌ஷய்குமார் மற்றும் ஏ.ஆர்.ரஹமான் என பல கில்லாடிகள் இப்படத்தில் இணைந்திருப்பதும் இன்னொரு காரணம். 

இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா வரும் நவம்பர் 20-ம் தேதியன்று மும்பையில் நடைபெறவுள்ளது.

endhiran-2-0-poster-2

மும்பையில் உள்ள யாஷ் ராஜ் ஸ்டூடியோஸில் நவம்பர் 20-ம் தேதியன்று மாலை 5 மணிக்கு இந்த விழா நடைபெற இருக்கிறது. லைக்கா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யு-டியூப் பக்கத்தில் https://www.youtube.com/LycaProductions இந்த விழா பிரத்யேகமாக நேரடியாக ஒளிபரப்பபட இருக்கிறது. மேலும் லைகாவின் மோபைல் அப் (Andriod& IOS) மூலமாகமும் இந்நிகழ்வை நேரடியாக காணலாம்.

இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர், அக்‌ஷய்குமார், படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹமான், ஏமி ஜாக்சன் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

இவ்விழாவை இந்தி திரையுலகின் மிகப் பெரிய தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரான கரண் ஜோஹர் தொகுத்து வழங்கவிருக்கிறார். 

முதன் முறையாக ‘2.0’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளிவரவிருக்கிறது. எப்போதும் எந்தவொரு விஷயத்திலும் புதுமையை விரும்பும் இயக்குநர் ஷங்கர், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் விஷயத்திலேயே தனது புதுமையை தொடங்கிவிருக்கிறார்.

அது என்னவென்று நவம்பர் 20-ம் தேதியன்று தெரிந்துவிடும்..!

Our Score