வேளச்சேரி பீனீக்ஸ் மாலில் 11 புதிய தியேட்டர்கள் திறப்பு..!

வேளச்சேரி பீனீக்ஸ் மாலில் 11 புதிய தியேட்டர்கள் திறப்பு..!

சென்னை வேளச்சேரி ஃபீனிக்ஸ் மாலில் 11 திரைகள் கொண்ட 4-K டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன்கூடிய SPI சினிமாஸின் லக்ஸ் தியேட்டர் வரும் ஏப்ரல்-14 முதல் திறக்கப்படவுள்ளது.

U05C7703

இதுவொரு மாறுபட்ட, நவீனமான மற்றும் உள்ளம் கவர்கின்ற சினிமா அனுபவத்தை வழங்குவதற்காக அனைத்து பாரம்பரிய வழக்கங்களை தகர்த்தெறிகிற புதிய சினிமா அமைவிடமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் உணவகம், கஃபே, ரீடெய்ல் ஸ்டோர், ஸ்பா, விளையாட்டு இடம், என பல நவீன வசதிகள் கொண்டு உள்ளன. இது படைப்புத் திறன், நவீன ஸ்டைல், வசதி, தரம் என அனைத்தையும் கொண்டு நவீன தொழில் நுட்பத்தில் அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளது.

U05C7729

லக்ஸ் கதவை திறந்தவுடனே காற்றோட்டம் கொண்ட இடம், இத்தாலி நாட்டு மார்பிள், வெல்வெட் போன்ற சுவர், கிரிஸ்டல் விளக்குகள், அழகிய வடிவங்கள் பதிக்கப்பட்ட கண்ணாடிப் பரப்புடன் பார்வையாளர்களை வரவேற்கிறது. முன்கூடத்தில் உணவகம் உள்ளது. முன்கூடத்தின் மையப் பகுதியில் 72 எல்சிடி திரைகள் கொண்ட வீடியோ தூண் சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது.

U05C7880

முன்கூடத்தின் வலதுகை பக்க மூலையில் சற்று உயரமான மேடையில் பெரிய பியானோ ஒன்று வைக்கப்பட்டுள்ளது. ஆட்டோமேட்டட் ஐபாட் உடன் இணைக்கப்பட்ட இதனிலிருந்து எல்லா காலத்து பிரபலமான இசையமைப்பாளர்களின் ரம்மியமான பாடல்களை கேட்டு அனுபவிக்கலாம்.  முன்கூடத்தில் வாஷ்ரூம்கள், ஒன்று பெண்களுக்கு, இரண்டு ஆண்களுக்கு மற்றும் வெவ்வேறு இடங்களில் மேற்கத்திய செட்கள் என வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், பெண்களுக்கு என பிரத்யேகமாக ஏழு வாஷ்ரூம்கள், பென்ஹாலிகன்ஸ் பொருட்களைக் கொண்டு வசதியாக அமைக்கப்பட்டுள்ளன.

U05C0059

லக்ஸ்-ல் மொத்தம் 2688 இருக்கைகள் கொண்ட 11 அதிநவீன திரைகள் உள்ளன. ஒவ்வொரு திரையும் வசதியான இருக்கைகள், அழகிய அலங்காரம் மற்றும் ஒளியமைப்பு வசதி என அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியவாறு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

U05C2519

ஒவ்வொரு திரைக்கும் இறக்குமதி செய்யப்பட்ட தனித்தனி துணிவகைகளைக் கொண்டு வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. டிசைனர் வினைல் இருக்கைகளும், வித்தியாசமான வண்ணங்களும் கலந்திருப்பது ஒரு உணர்வுபூர்வமான சுற்றுச்சூழலை ஏற்படுத்துகிறது.

U05C2534

திரைகளில் 3-ஜி தொழில்நுட்பத்துடன் கூடிய RDX-4K டிஜிட்டல் புரொஜக்டர்கள், 2.4 Gain Silver Screen மற்றும் டிஜிட்டல் ஆடியோ என நவீன தொழில் நுட்பத்துடன் பொருத்தப்பட்டுள்ளது.

U05C2541

எங்களுடைய எல்லா சினிமா திரையரங்குகளிலும் உள்ளது போல லக்ஸ்-லும் 4-K-ல் உண்மையான டிஜிட்டல் அனுபவம் வழங்கப்படுகிறது. அனைத்து திரைகளும் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் அதிநவீன 4-K Resolution-உடன் பார்கோ டிஜிட்டல் புரொஜக்டர்களைக் கொண்டுள்ளன. 4-K Resolution-ல் பிரமிக்க வைக்கும் வகையில் படங்கள் தெரிவதுடன், 33000 Lumens-ல் துள்ளியமான திரைகள் அனைத்தும், அனைத்து அலைவரிசை வகைகளிலும் உயர்ந்த துல்லியத் தன்மையை கொடுப்பதற்காக உலகில் தலைசிறந்த QSC DCP 300  புராசஸருடன் 4 வழி QSC ஸ்பீக்கர்கள் வசதி கொண்டுள்ளன. இதை கேட்கும்போது ஈடு இணையற்ற ஒலி அனுபவத்தை நீங்கள் பெற்றிடுவீர்கள். சினிமா ஒலியமைப்பில் அதிநவீனமான டால்பி அட்மாஸ் ஒரு திரையில் தற்போது நிறுவப்பட்டுள்ளது. அடுத்த சில மாதங்களில் மற்ற எல்லா திரைகளிலும் டால்பி அட்மாஸ் நிறுவப்படுவதற்கான திறனாக்க வசதி அமைக்கப்பட்டுள்ளது.

U05C7976

நிறுவப்பட்டுள்ள அனைத்து அமைப்புகளும் துல்லியமான சோதிப்பு சாதனங்களால் பரிசோதிக்கப்பட்டுள்ளன மற்றும் தொழிற்சாலையில் சிறந்த முறையில் பயிற்சியளிக்கப்பட்ட, நிறுவனத்தின் சொந்த பொறியாளர்களால் நிறுவப்பட்டு இயக்க நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

U05C8531

லக்ஸ் நுழைவாயிலில் உள்ள சுவரில் திரைப்படங்கள் மற்றும் அமர்வுகள் குறித்த தகவல்களை வழங்கும் கணினி திரைகள் அமைக்கப்பட்டுள்ளது. சுவரில் பொருத்தப்பட்டிருக்கும் திரைகளில் திரைப்படங்கள் பற்றிய தகவல், அமர்வு நேரங்கள் பற்றி பிரவுஸ் செய்வதுடன் அவர்கள் முன்பதிவு செய்த டிக்கெட்களைப் பெறுதல் முதலியவற்றையும் செய்து கொள்ளலாம்.

U05C7902

முன்கூடத்தின் மையப் பகுதியில் அழகிய சில்லரை விலை கடையும் உள்ளது. இதில் அன்பளிப்பு பொருட்கள் மற்றும் நினைவுப் பொருட்களையும் லக்ஸ்ற்கு வந்த நினைவாக வாங்கிக் கொள்ளலாம்.

U05C2596

லக்ஸில், ரிலாக்ஸ் செய்து கொள்வதற்கென்று ஒரைஸா நிபுணர்களால் செயல்படுத்தப்படும் ஸ்பா ஒன்று உள்ளது. உலகில் தலைசிறந்த மசாஜ் நாற்காலியான இனாடா சொக்னோ நாற்காலியில் அமர்ந்து வாடிக்கையாளர்கள் மசாஜ் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். பிற அற்புதமான சிகிச்சைகளுள் ஒன்றை அல்லது ரிஃப்லெக்ஸாலஜி செயல்பாட்டை விருந்தினர்கள் அனுபவித்து தங்களை ரிலாக்ஸ் செய்துகொள்வதற்கென தனிப்பட்ட அமைவிடமும் இந்த ஸ்பாவில் இடம் பெற்றிருக்கிறது.

U05C9157

லக்ஸ்-ல் அமைந்துள்ள ரெஸ்டாரன்ட் அற்புதமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பிரதான முன்கூடத்தில் அமைந்துள்ள உணவகத்தில், உணவருந்தும் வசதியும் மற்றும் முன்கூட இருக்கை வசதியும் சேர்ந்து அமைந்துள்ளன. இங்கு முழு சேவை வழங்கும் ரெஸ்டரான்ட் தரத்தில்  உணவுகள் கிடைக்கின்றன. சினிமா கூடத்தின் முடிவில் இது அமைந்திருக்கிறது மற்றும் ரிலாக்ஸ்டாக பொழுதுபோக்குவதற்கான வடிவமைப்பையும் இது கொண்டிருக்கிறது.

U05C9188

லக்ஸில் உணவகத்தை தொடர்ந்து ஐஸ்க்ரீம் பிரியர்களுக்கு என்று பிரத்தியகமாக ”18 Below” என்கிற ஐஸ் க்ரீம் ஸ்டால் ஒன்று அமைந்துள்ளது. நீங்கள் நினைத்துக்கூட பார;க்க முடியாத ஒரு புதிய ஐஸ் க்ரீம் அனுபவத்தை புதிய சுவைகளுடன் ருசிக்கலாம். இந்த ஐஸ்க்ரீம் மற்றும் டாப்பிங்ஸ் சைவ உணவு முறையில் தயாரிக்கப்பட்டவை. கஸ்டமர்களை மேலும் கவரும் வகையில் அவரவர் தம் விருப்பதிற்க்கேற்ப பிடித்தமான Flavour மற்றும் டாப்பிங்ஸ்களை கொண்டு ஃபேவ்ரேட் ஐஸ் க்ரீமை உருவாக்கி கொள்ளலாம்.

U05C9355

 கஃபேயையொட்டி விளையாட்டு(கேமிங்) இடம் அமைந்திருக்கிறது. படம் பார்ப்பதற்கு காத்திருக்கும் நேரத்தில் அல்லது அவர்களது பெற்றோர்கள் தேனீர் அல்லது காஃபியை ரசித்து அருந்திக் கொண்டிருக்கிற நேரத்தில், புதிய தலைமுறை விளையாட்டுகளை குழந்தைகள் விளையாடுவதற்கு ஏற்ற வகையில், புதிய தலைமுறைக்கான கேமிங் கன்சோல்கள் மற்றும் பல விளையாட்டுகள் உள்ளன.

இவ்வளவு தகவல்களும் இந்த பீனிக்ஸ் மால் நிர்வாகம் அனுப்பி வைத்திருக்கும் பிரஸ் நோட்டில் உள்ளது. எல்லாம் சரி.. டிக்கெட் கட்டணம் எவ்வளவுன்றீங்களா..?

ஒரே கட்டணம்தானாம்.. 120 ரூபாய்.. ஒரு நாளைக்கு  4 காட்சிகள். சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் மட்டும் 5 காட்சிகளாம்..!

எதற்கும் கவலைப்படாத ஜீவன்கள்.. இனி பீனிக்ஸ் மாலில் உள்ள தியேட்டர்களிலும் தங்களது வாழ்க்கையை அனுபவிக்கலாம்..! என்ஜாய் மக்களே..!

Our Score