full screen background image

ஹரீஷ், ரிச்சர்ட் இணைந்து நடிக்கும் ‘0 முதல் 1 வரை’ திரைப்படம்

ஹரீஷ், ரிச்சர்ட் இணைந்து நடிக்கும் ‘0 முதல் 1 வரை’ திரைப்படம்

ஹரீஷ் – ரிச்சர்ட் இணைந்து நடிக்கும் அறிமுக இயக்குநர் யாசின் இயக்கும் படம் ‘0 முதல் 1 வரை..’

பரபரப்பான படங்கள் வரிசையில் இணையும் நோக்கில் உருவாகவுள்ள படம்தான் இந்த  ‘0 முதல் 1 வரை’. இப்படத்தை சிங்கு  பிங்கு புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்தப் படத்தின் மூலம் சபீர் என்பவர் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இவர் சிங்கப்பூரில் இசைப் பள்ளி வைத்துள்ளார். இசை ஆல்பங்களும் உருவாக்கியுள்ளார். இசை நுட்பத்துடன் ஒலி நுட்பமும் அறிந்தவர். பாடல்களை விவேகா, தனிக்கொடி எழுதுகிறார்கள். ஒளிப்பதிவு பாபு குமார். வசனத்தை இயக்குநர் கே.எஸ்.நீலன் எழுதியிருக்கிறார். சண்டை காட்சிகளை சக்தி சரவணன் அமைக்கிறார். கலை – எஸ்.ராஜா மோகன். படத் தொகுப்பு – கே. எம்.ரியாஸ்.

இந்தப் படத்திற்கு கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார் யாசின். இவர், சினிமாவில் உதவி இயக்குநர், விளம்பரப் படங்களில் இயக்குநர்   எனப் பரவலான அனுபவங்களுடன் இப்படத்தின் மூலம் இயக்குநராகத் திரையில் கால் பதிக்கிறார். 

படம் பற்றி இயக்குநர் யாசின் பேசும்போது, “அறிவியலுக்கும்,  நம்பிக்கைக்கும்  இடையே உள்ள தொடர்பை வித்தியாசமான கண்ணோட்டத்தில் அலசி ஆராயும் ஒரு புதிய முயற்சிதான்  இந்த   ‘0 முதல் 1 வரை’ படம்.

திரில்லர் மற்றும் காதல், ஆக்சன் என கலந்து கட்டிய கதை இதில் இருக்கிறது. ஹரீஷ் – ரிச்சர்ட் இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். தமிழ் சினிமாவில் இவர்கள் இருவரும் மிக முக்கியமான இடத்தைப் பிடிக்க அனைத்து தகுதிகளும் கொண்ட  நடிகர்கள். ஒரு வெற்றி இவர்களை மக்கள் மத்தியில் கொண்டு போய் நிறுத்திவிடும். அதற்கான அடித்தளத்தை இந்த ‘0 முதல் 1 வரை’ படம் செய்யும்.  

இதில் மூன்று  தலைமுறைக் கதைகள் வரும். கிராமம், நகர்ப்புறம், மாநகரம் என்று மூன்றுவிதமான பின்னணிகள் வரும்; எழுபதுகள், தொண்ணூறுகள், நடப்புக் காலம் என மூன்று விதமான காலகட்டங்கள்  வரும். வித்தியாசமான கதைக் களத்தில்   புதிய திரைக்கதை யுக்தியுடன்  இப்படம் உருவாக உள்ளது. ஹரீஷ் – ரிச்சர்ட்  இவர்களுடன்   முன்னணி முகங்கள் பலரும்  இப்படத்தில் நடிக்கிறார்கள்’’ என்றார்.

கிராமம் நகரம், மாநகரம் என்று படத்தில் இடம் பெறுகின்ற ஊர்ப் பின்னணிகளுக்கு ஏற்ப மதுரை, ஆண்டிபட்டி. சென்னை  என்று படப்பிடிப்பு நடக்கவுள்ளது.

பிப்ரவரி முதல் வாரத்தில் படப்பிடிப்பைத் தொடங்கவுள்ளனர். ஒரே கட்டத்தில்  தொடங்கி 45 நாட்களில் முடிக்கவுள்ளனர்.

Our Score