ஜி.வி.பிரகாஷ் இசையில் யுவன் ஷங்கர் ராஜா பாடிய ‘முத்தம் கொடுத்த மாயக்காரி’.

ஜி.வி.பிரகாஷ் இசையில் யுவன் ஷங்கர் ராஜா பாடிய ‘முத்தம் கொடுத்த மாயக்காரி’.

சமீபகாலமாக ஒரு இசை அமைப்பாளரின் இசையில் மற்றொரு இசை அமைப்பாளர் பாடுவது என்பது ஒரு கலாச்சாரமாகவும் பழக்கமாகவும் மாறி வருகிறது.

அந்த வகையில் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்துக்காக இசை அமைப்பாளரும் நாயகனுமாகிய ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்க யுவன் ஷங்கர் ராஜா பாடும் பாடல் ஒன்று பதிவானது.

Yuvan-Shankar-Raja-sings-a-song-for-GV-Prakash-Kumar-jpg

இளைஞர்கள் இடையே   ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. படக் குழுவினரும் படத்துக்கு பலம் சேர்க்கும் வகையில் ‘நாளொரு சேதி; பொழுதொரு எண்ணம்’ என்ற வகையில் படத்தின் சுவையைக் கூட்டி வருகின்றனர். இப்போது அடுத்த சுவாரஸ்யமாக ஹீரோ ஜி.வி.பிரகாஷுக்காக யுவன் ஷங்கர் ராஜாவின் குரலில் ‘முத்தம் கொடுத்த மாயக்காரி’ என்ற நா.முத்துக்குமாரின் பாடல் பதிவானது.

BAS_4083

“இந்தப் பாடல் நிச்சயம் இளைஞர்களை கவர்ந்து இழுக்கும் என்பதில் ஐயமே இல்லை.  யுவன் ஷங்கர் ராஜாவின் குரலில் உள்ள  துள்ளலை, காட்சியிலும் பிரதிபலிக்க வேண்டும் என்ற எங்கள் திட்டம் பலித்து இருக்கிறது. இந்தப் பாடலுக்காக மனிஷா யாதவும், ஜி.வி.பிரகாஷும் சேர்ந்து ஆடியிருக்கும் ‘குத்தாட்டம்’  இப்போது  செம்ம ஹிட். பட்டிதொட்டியெங்கும் இந்தப் பாடல் தான் எதிரொலிக்கிறது.  படத்தின் வெற்றிக்கு இந்த பாடல் பெரிதாக உதவும்..” என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் இயக்குநர் ரவிச்சந்திரன்.

Our Score