full screen background image

‘தங்கமீன்கள்’ விருதை யுவன்சங்கர்ராஜாவுக்கு தாரை வார்த்த கதை..!

‘தங்கமீன்கள்’ விருதை யுவன்சங்கர்ராஜாவுக்கு தாரை வார்த்த கதை..!

சர்ச்சையாகி போன விஜய் டிவியின் 8-வது ஆண்டு திரைப்பட விருதுகள் நிகழ்ச்சி இன்றைக்கு ஒளிபரப்பானது.

சிறந்த படத்துக்கான விருதை ‘தங்கமீன்கள்’ படம் பெற்றது. இதற்கான விருதை தனது குழுவினருடன் மேடைக்கு வந்து பெற்றுக் கொண்டார் இயக்குநர் ராம். அப்போது அவர் பேசும்போது அத்திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சாதனா இந்த விருதை மிகவும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த கதையைக் கூறினார்.

படத்தில் தொடர்புடைய அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்ட ராம், ‘பரதேசி’ படத்தோடு ‘தங்கமீன்கள்’ படத்தின் டிரெயிலரை இணைக்க வேண்டும் என்று பாலாவிடம் கேட்டதையும் கூறினார். உடனேயே ஒத்துக் கொண்ட பாலா, ஜே.எஸ்.கே.சதீஷ்குமாரை தொடர்பு கொண்டு பேசும்படி சொல்ல.. அதுதான் ‘தங்கமீன்கள்’ படத்தையே ரிலீஸ் செய்ய உதவியதாகவும் சொன்னார் ராம்.

மேலும், இந்த படத்தின் மிகப் பெரிய தூணே இசையமைப்பாளர் யுவன்தான் என்றார்.  ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ பாடலுக்கு விருதுகள் கிடைக்காதது குறித்து கோபிநாத்திடம் ஏதோ பேசியிருக்கிறார் போலிருக்கிறது. அதன் கடைசியில் “அது வேற கேட்டகிரியில் இருக்கிறது..” என்று கோபிநாத் சொல்ல.. “இல்லை.. நான் பார்த்துட்டேன்…” என்கிறார் ராம்.. இதற்கு மேலான பேச்சுக்களை விஜய் டிவி கட் செய்துவிட்டது..

கடைசியாக, “ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாடலின் 2 வரிகளை ஒளிபரப்பும்படி” ராம் கேட்பதை மட்டும் ஒளிபரப்பியது.. கோபிநாத்தும் மைக்கில் இதை வழிமொழிய செல்வம் என்பவர் மேடைக்கு வந்து 4 வரிகளை பாடிவிட்டுச் சென்றார்.

தொடர்ந்து பேசிய ராம், தேசிய விருதுப் பட்டியலில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் யுவன்சங்கர்ராஜாவுக்கு தேசிய விருது கிடைக்காமல் போய்விட்டதாகக் கூறினார். இதே கதைதான் பூனா பெஸ்டிவலிலும், ஹைதராபாத் பெஸ்டிவலிலும் நடந்ததாகக் கூறினார்.

“நாங்கள் ஏற்கெனவே தேசிய விருதையெல்லாம் பெற்றுவிட்டதால் இந்தப் படத்திற்கான இந்த விருதை யுவன்சங்கர்ராஜாவுக்கே வழங்குகிறேன்.. அவர் மேடைக்கு வர வேண்டும்…” என்று சொல்ல.. யுவன் மேடைக்கு வந்தார்.

ராம் வற்புறுத்தி தனக்குக் கொடுக்கப்பட்ட பரிசை யுவன் கையில் திணித்துவிட்டார்..

‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ பாடல் சிறந்த பாடலுக்கான போட்டியில் இல்லாமல், சிறந்த பாடகருக்கான விருதுப் பட்டியலில் ஸ்ரீராம் பார்த்தசாரதிக்காக இடம் பிடித்திருந்தது கடைசியில்தான் தெரிய வந்தது..! இதனையும் விஜய் டிவி ஒளிபரப்பியது.

கடைசியாக விஜய் டிவி எப்போதும் நேர்மையாகவும், எந்த உள் அரசியலும் இல்லாமலேயே இந்த விஜய் அவார்டுகளை வழங்கி வருவதாக செய்தியையும் சொல்லி தனது நடுநிலைமையைக் காட்டிக் கொண்டது..!

அந்த வீடியோ காட்சி இது :

Our Score