ஒரு சங்கை ஊதிய பிறகு, ஆள் ஆளுக்கு அதே சங்கை ஊதிக் கொண்டிருக்கிறார்கள்.. காதுதான் கிழியுது..!
இசையமைப்பாளர் யுவன்சங்கர்ராஜா இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டார் என்பதை அவரே சொல்லிவிட்ட பிறகு… அவர் எப்போது மாறினார்..? குடும்பச் சிக்கல்கள்..? தந்தையின் எதிர்ப்பு..? 5 வேளையும் நமாஸ் செய்கிறாரா..? என்னதான் பிரச்சினை..? ஜாதி பிரச்சினையா..? நிம்மதி இல்லையா..? என்று இணையத்தளங்களில் அவரை வறுத்தெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்..!
இது போதாதென்று சில இஸ்லாமிய ஆதரவு வெப்சைட்டுகளில் யுவனை வாழ்த்தியும், வரவேற்றும் கட்டுரைகள் எழுதப்பட்டு வருகின்றன.. இதில் ஒரு இணையத்தளம் இந்தாண்டின் முதல் நாளான 2014 ஜனவரி 1-ம் தேதியே மலேசிய தலைநகர் கோலாலாம்பூரில் வைத்துத்தான் யுவன் மதம் மாறியதாக கூறி அதற்கு ஆதாரமாக சில புகைப்படங்களை வெளியி்ட்டுள்ளது.
மதம் மாறுவதற்காக அயல்நாடுதான் போக வேண்டுமா என்ன..? இந்தியக் குடியுரிமை பெற்ற ஒரு குடிமகன், தனது அடிப்படை உரிமையான மதம் மாறுதலை உள்நாட்டிலேயே செய்து கொள்ளலாமே..? வெளிநாட்டில் செய்யும் மத மாறுதலை இங்கே அரசுகள் ஏற்றுக் கொள்ளுமா என்றெல்லாம் தெரியவில்லை..!
ஆனால் யுவன்சங்கர் ராஜா வெளிப்படையாக இது குறித்து பேசாதவரையில் இந்தச் சர்ச்சைகள் மென்மேலும் தொடரத்தான் செய்யும்..! இந்தச் சர்ச்சைகளுக்கிடையில் டிவிட்டரில் தனது அக்கவுண்ட் பெயரை ‘காலித் யுவன்’ என்று பெயர் மாற்றியிருக்கிறார் யுவன்..!