full screen background image

‘யூகி’ படத்தை 11:11 நிறுவனம் வெளியிடுகிறது

‘யூகி’ படத்தை 11:11 நிறுவனம் வெளியிடுகிறது

‘Forensic’ மற்றும் ‘Kala’ போன்ற மலையாளத்தில் வெற்றி பெற்ற படங்களை தயாரித்த Juvis Productions நிறுவனம் UAN Film House மற்றும்  AAAR Productions நிறுவனங்களுடன் இணைந்து தயாரித்துள்ள படம் ‘யூகி’.

இந்த ‘யூகி’ படத்தில்  கதிர், நரேன், நட்டி, பவித்ரா லட்சுமி, கயல் ஆனந்தி மற்றும் ஆத்மியா ராஜன் ஆகியோர் முதன்மை  பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். மேலும், பிரதாப் போத்தன், ஜான் விஜய், முனீஷ் காந்த், சினில் சைனுதீன், வினோதினி, அஞ்சலி ராவ் மற்றும் பிந்து சஞ்சீவ் ஆகியோரும்  முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

திரைக்கதை – ஜாக் ஹாரிஸ், கதை, வசனம்: பாக்கிராஜ் ராமலிங்கம், ஒளிப்பதிவு: புஷ்பராஜ் சந்தோஷ், படத் தொகுப்பு : ஜாமின், இசை: ரஞ்சின் ராஜ், ஒளிப்பதிவு: ஸ்ரீ கிரிஷ், இணை இயக்கம்: K ஸ்ரீதர், VFX மேற்பார்வை: பிரஷாந்த் K நாயர், தயாரிப்பு ஒருங்கிணைப்பு: ஷிஜில் சில்வெஸ்டர், பின்னணி இசை & ஒலி வடிவமைப்பு: டான் வின்சென்ட், பாடல் வரிகள்: கபிலன், கலை இயக்கம்: கோபி ஆனந்த், சண்டைப் பயிற்சி: ஃபோனிக்ஸ் பிரபு, எக்ஸிகியூட்டிவ் புரொடியூசர்: ஷிலு அலெக்ஸ், தயாரிப்பு கட்டுப்பாடு: T.முருகேசன், DI: Fire Fox ஸ்டுடியோஸ், கலரிஸ்ட்: ஸ்ரீகாந்த் ரகு, ஒப்பனை: வினோத் சுகுமாறன், ஆடை வடிவமைப்பாளர்: நிவேதா ஜோசப், பத்திரிகை தொடர்பு: சுரேஷ் சந்திரா & ரேகா (D’One), படங்கள்: சந்துரு- சுஜீஷ் போஸ்.

11:11 தயாரிப்பு நிறுவனம் மூலமாக விநியோகஸ்தரும், தயாரிப்பாளருமான டாக்டர். பிரபு திலக் வெளியிடவுள்ளார்.

இது குறித்து டாக்டர் பிரபு திலக் பேசுகையில், “இந்த ‘யூகி’ படத்தின் வெளியீட்டு உரிமையை 11:11 புரொடக்‌ஷன் வாங்கியிருப்பதில் மகிழ்ச்சி. படத்தில் கடுமையான தரமான உழைப்பை வழங்கி இருக்கும் அணியோடு இணைந்திருக்கிறோம் என்பதில் எங்களுக்குப் பெருமையாக உள்ளது.

பார்வையாளர்களைக் கட்டிப் போடும் வகையிலான சிறப்பான சில அம்சங்கள் இந்தக் கதையில் உள்ளது. 11:11 புரொடக்‌ஷன்ஸ் எப்போதுமே தனித்துவமான கதைகளை உருவாக்குவதில் ஆர்வம் காட்டும். அந்த வரிசையில் ‘யூகி’ படமும் நிச்சயமும் தனித்துவமான கதையாக அமையும்.

திறமையான நடிகர்கள், தொழில் நுட்பக் குழு ஆகியோர் படத்தை சிறப்பாகக் கொண்டு வந்திருக்கின்றனர். அது நிச்சயம் பார்வையாளர்களுக்கும் பிடிக்கும் என்பதில் நம்பிக்கை இருக்கிறது.

இந்தப் படத்திற்கான தனித்துவமான புரோமோஷன் திட்டங்கள் குறித்து பேசி வருகிறோம். உலகம் முழுவதும் திரையரங்குகளில் படத்தை வெளியிட நாங்கள் திட்டமிட்டிருக்கோம். வெளியீட்டு தேதி குறித்து விரைவில் அறிவிக்க இருக்கிறோம்” என்றார்.

Our Score