full screen background image

பூஜையுடன் துவங்கிய ‘யோலோ’ திரைப்படம்..!

பூஜையுடன் துவங்கிய ‘யோலோ’ திரைப்படம்..!

MR Motion Pictures சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில், இயக்குநர் S.சாம் இயக்கத்தில், புதுமுகம் தேவ் நாயகனாக மற்றும் தேவிகா நாயகியாக நடிக்க, மனதை இலகுவாக்கும் ரொமான்ஸ் காமெடி ஜானரில், கலக்கலான கமர்ஷியல் எண்டர்டெயின்ராக உருவாகும் “யோலோ” திரைப்படத்தின் பூஜை, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்து கொள்ள, இன்று இனிதே நடைபெற்றது.

இப்படத்தில் தேவ், தேவிகா நாயகன் நாயகியாக நடிக்க, முக்கிய பாத்திரங்களில் படவா கோபி, பிரவீன், சுவாதி நாயர், ஆகாஷ் பிரேம், நித்தி பிரதீப், திவாகர், யுவராஜ், திலீப் குமார், விஜே நிக்கி, தீபிகா, தீப்சன், சுப்பு, பூஜா ஃபியா, விக்னேஷ், லக்‌ஷ்மி ஆகியோர் இணைந்து நடிக்கிறார்கள்.

தயாரிப்பு நிறுவனம் – MR Motion Pictures, தயாரிப்பு – மகேஷ் செல்வராஜ், இயக்கம் – S. சாம், ஒளிப்பதிவு – சூரஜ் நல்லுசாமி, இசை – சகிஷ்னா சேவியர், எடிட்டிங் – A L ரமேஷ், கலை இயக்கம் – சம்பத் திலக், கதை – ராம்ஸ் முருகன், ஸ்டண்ட் – டேஞ்சர் மணி, நடனம் – கலைக்குமார், திரைக்கதை – S. சாம், ராம்ஸ் முருகன், பண்பு செல்வன், பாடல்கள் – முத்தமிழ், சூப்பர் சுப்பு, சதீஸ்காந்த், உடைகள் – நட்ராஜ், உடை வடிவமைப்பு – மீனாட்சி ஸ்ரீதரன், ஸ்டில்ஸ் – மணியன், தயாரிப்பு நிர்வாகி -புதுக்கோட்டை M. நாகு, விளம்பர வடிவமைப்பு – வியாகி, பத்திரிக்கை தொடர்பு – சதீஷ்(AIM).

“வாழ்க்கை ஒரு முறைதான்; அதை சரியாக வாழுங்கள்” எனும் கருத்தில், மனதை இலகுவாக்கி, முகத்தில் புன்னகை மலரச் செய்யும் அழகான காதல் திரைப்படமாக, இன்றைய தலைமுறை வாழ்க்கையைப் பதிவு செய்யும் படைப்பாக ரோம் காம் ஜானரில், கலக்கலான கமர்ஷியல் எண்டர்டெயின்ராக, இப்படம் உருவாகிறது.

இயக்குநர் அமீர் மற்றும் சமுத்திரகனியிடம் இணை இயக்குநராக பணியாற்றிய S.சாம் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாகச் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் நடத்தப் படக் குழு திட்டமிட்டுள்ளது.

இப்படத்தின் பூஜையில் இயக்குநர் அமீர், இயக்குநர் சமுத்திரக்கனி, இயக்குநர் சுப்பிரமணியம் சிவா முதலானோர் கலந்து கொண்டு படக் குழுவினரை வாழ்த்தினர்.

 

Our Score