தமிழ்ச் சினிமாக்களில் இல்லாத தொடர் சிரிப்புக்களை உதிர்த்துக் கொண்டேயிருந்த்தால் ஒரு காலத்தில் தமிழ் நாடகங்களுக்கு மக்கள் மத்தியில் மவுசு கூடவே இருந்த்து. அதே சிரிப்பு நாடக ஆசிரியர்கள் சினிமாவுக்குள்ளும் நுழைந்து, சினிமாவும் நகைச்சுவைத் துணுக்குத் தோரணங்களான பின்பு நாடகங்களுக்கு மவுசும் குறையத் துவங்கியது..
முன்பு போல் பெரும் கூட்டம் கூடாமல், இப்போது ஓரளவிற்கு பேர் சொல்லும்விதமாக நடந்து வருகின்றன நாடகங்கள். நாடக சபாக்கள் அதிகமானாலும் நாடக ஆசிரியர்கள், நடிகர்கள் கொஞ்சம் பேர்தான் வலம் வந்து கொண்டிருக்கின்றன. அதில் ஒய்.ஜி.மகேந்திரனும் ஒருவர். அவருடைய தந்தை ஒய்.ஜி.பார்த்தசாரதிதான் இப்போதைய நவீன நாடகக் குழுக்களின் முன்னோடி.
அவருடைய ‘யூஏஏ’ என்றழைக்கப்படும் யுனைட்டெட் அமெச்சூர் ஆர்ட்டிஸ்ட் நாடகக் குழு ஆரம்பிக்கப்பட்டு 65 வருடங்களாகிவிட்டது. இதில் இவர்கள் 63 நாடகங்களை போட்டிருக்கிறார்களாம்.. ஒய்.ஜி.மகேந்திரனும் சினிமாவுக்கு வருவதற்கு முன்பாகவே நாடகங்களில் அவரது தந்தையுடன் நடிக்கத் துவங்கிவிட்டார். 52 வருடங்களாக மேடை நாடகத்தில் நடித்து வருகிறார் ஒய்.ஜி.மகேந்திரன். அவர் தந்தையின் மறைவுக்குப் பிறகு தனியாக நாடகத்தை எழுதி தானே ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். இதுவரையிலும் 41 நாடகங்களை அமைத்திருக்கும் ஒய்.ஜி.மகேந்திரனின் 42வது நாடகம்தான் இந்த ‘இரண்டாம் ரகசியம்’. இது பிரபல நாடக ஆசிரியர், மற்றும் தொலைக்காட்சி சீரியல் இயக்குநரான வெங்கட் இயக்கிய நாடகம். இதில் ஹீரோயினாக ஒய்.ஜி.மகேந்திரனின் ஜோடியாக நடிகை லஷ்மியின் மகளான நடிகை ஐஸ்வர்யா நடிக்கிறார். இவர் நடிக்கும் முதல் நாடகமே இதுதானாம்..!
நாடகம் நடைபெறும் இடங்கள் மற்றும் தேதி
மார்ச் 1 – மாலை 7 மணி கிருஷ்ணகானசபா, தி.நகர்
மார்ச் 3 – மாலை 7 மணி ரஞ்சனி ஹால் – நங்கநல்லூர்
மார்ச் 9 – மாலை 4 மணி – பாரதி வித்யா பவன் – மைலாப்பூர்
மார்ச் 9 – மாலை 7 மணி – பாரதி வித்யா பவன் – மைலாப்பூர்
மார்ச்-15 – மாலை 7 மணி – காமாட்சி கல்யாண மண்டபம் – குரோம்பேட்டை
மார்ச்-16 – மாலை 4 மணி – வாணி மஹால் – தி.நகர்
மார்ச் – 16 – மாலை 7 மணி – வாணி மஹால் – தி.நகர்
மார்ச் – 23 – மாலை 4 மணி – காமராஜர் ஹால் – தேனாம்பேட்டை
மார்ச் 23 – மாலை 7 மணி – காமராஜர் ஹால் – தேனாம்பேட்டை
நாடக ஆர்வலர்களே.. உங்களுக்கொரு இனிப்பான செய்தி. இந்த நாடகங்களுக்கான அனுமதி முற்றிலும் இலவசமாம்..