வரும் 5-ம் தேதி ரிலீஸாகவிருக்கும் ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் உலகம் முழுவதும் 1000 திரையரங்குகளில் திரையிடப்பட இருக்கிறது.
இப்போதே தலயின் ரசிகர்கள் தங்களது கொண்டாட்டத்தை இணையத்திலும், தியேட்டர்களிலும் கொண்டாடத் துவங்கிவிட்டார்கள். கடந்த சில நாட்களாக இடைவேளையின்போது திரையிடப்படும் ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தின் டிரெயிலருக்கு சகல தரப்பினர் மத்தியிலும் ஏகத்திற்கும் ரெஸ்பான்ஸாம்..!
இந்த நிலையில் ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் சென்சார் செய்யப்பட்டுள்ளது. ‘U/A’ சர்டிபிகேட்டுதான் கிடைத்திருக்கிறது. முதல் சென்சாரில் 2 மணி 56 நிமிடங்கள் படம் ஓடுவதாக குறிப்பிட்பபட்டிருந்தது.
ஆனால் இப்போது இன்னும் கொஞ்சம் ஷார்ப் செய்திருக்கிறார்களாம். இப்போது 2 மணி 42 நிமிடங்கள் மட்டுமே ஓடுமாம்.. இத்தகவலை இப்படத்தில் வில்லனாக நடித்திருக்கும் அருண் விஜய் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.