இன்று புதுமுக தயாரிப்பாளர்கள் அதிகமாக வருகின்றனர். அந்த வகையில் புதுமுக தயாரிப்பாளரும் மற்றும் நடிகருமான பிரின்ஸ் நடிக்கும் ‘எனக்குள் ஏதோ’ படத்தின் ஷூட்டிங், பூஜையுடன் இன்று துவங்கியது.
இந்த ‘எனக்குள் ஏதோ’ திரைப்படம் புதுவிதமான ஹாரர்(HORROR) கதையை மையமாக கொண்டது.
இந்த படத்தின் தயாரிப்பாளரான பிரின்ஸே, இந்தப் படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். ‘மனம் கொத்திப் பறவை’ ஹிரோயின் ஆத்மியா கதாநாயகியாகவும், ‘ஒரு இயக்குநரின் காதல் டைரி’ படத்தில் நடித்த ஸ்வாதி இரண்டாவது ஹிரோயினாகவும் நடிக்கிறார்.
அஜித்தை வைத்து ‘ரெட்’ மற்றும் சூர்யாவை வைத்து ‘மாயாவி’ படத்தினை இயக்கிய இயக்குநர் நடிகர் சிங்கம் புலி, மனோபாலா, சுவாமிநாதன், ஜெயராஜ், மதுமிதா மேலும் பல முன்னணி நடிகர்களும் இப்படத்தில் நடிக்கிறார்கள்,
இசை – ஸ்ரீகாந்த் தேவா, ஒளிப்பதிவு – முரளி போஜன், படத்தொகுப்பு – நாகராஜ், கலை – பாபு, நடனம் – பாலா, சண்டை பயிற்சி – விஜய் ஜாக்குவார், எழுத்து, இயக்கம் – கார்த்திக் விஜயகுமார்.
இந்தப் படம் சென்னை பனையூரில் உள்ள ஷூட்டிங் HOUSE-ல் இன்று காலை பூஜையுடன் துவங்கியது.