full screen background image

“ஏண்டா ஆத்துல தெர்மாக்கோல போட்டீங்க..?” – நடிகர் மன்சூரலிகானின் குசும்பு..!

“ஏண்டா ஆத்துல தெர்மாக்கோல போட்டீங்க..?” – நடிகர் மன்சூரலிகானின் குசும்பு..!

இசையமைப்பாளர் மற்றும் பாடகரான திருமதி ஏ.ஆர். ரெஹானா ‘யோகி & பார்ட்னர்ஸ்’ என்ற நிறுவனத்தின் சார்பில்  தயாரித்து, இசையமைத்துள்ள படம் ‘ஏண்டா தலைல எண்ணெ வெக்கல’.

அறிமுக இயக்குநரான விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், புதுமுகம் அசார், சஞ்சிதா ஷெட்டி மற்றும் யோகி பாபு நடித்திருக்கும் இந்த படத்தின் இசை நேற்று மதியம் பிரசாத் லேப் தியேட்டரில் வெளியிடப்பட்டது.

படத்தின் இசையை இயக்குநர் பாக்யராஜ் வெளியிட இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி பெற்றுக் கொண்டார்.

ytev-audio-7

துவக்கத்தில் பேசிய தயாரிப்பாளர் ரெஹானா, “நான் டொரோண்டோ போனபோது அங்கே எனக்கு அறிமுகமானவர்தான் சுபா. ஒரு படம் தயாரிக்க வேண்டும் என்று சொல்லி இயக்குநரை தேர்வு செய்யச் சொன்னார். அப்படி உருவான படம்தான் இந்த ‘ஏண்டா தலைல எண்ண வெக்கல’.

rehainaa

இந்த வெயில் சீசன்ல எல்லாருடைய வீட்லயும் கேக்குற ஒரு கேள்வி ‘ஏண்டா தலைல எண்ண வெக்கல’ என்பதாகத்தான் இருக்கும். அதைத்தான் நாங்கள் இங்கே தலைப்பாக்கியிருக்கிறோம். இது வெயில் காலம் என்பதால் எல்லோரும் தலைக்கு எண்ணெய் வெச்சிட்டு வெளில போங்க.. அது உடம்புக்கு ரொம்ப நல்லது…” என்றார்.

விழாவில் பேசிய நடிகர் மன்சூரலிகான், “நான் கலா மாஸ்டரிடம் 3 ஆண்டுகள் டான்ஸ் கற்றுக் கொண்டவன். ஆனால் இன்னமும் டான்ஸில் நிரூபிக்கவில்லை, இனிதான் என் ஆட்டம் இருக்கப் போகுது.

கஷ்டப்பட்டு படம் தயாரிக்கிறவன் ஒருவன், ஆனா அதை கேபிள் டிவி, பஸ் என எல்லாவற்றிலும் முதல் நாளே திருட்டுத்தனமாக ஒளிபரப்புகிறார்கள். இனி அதை ராணுவ கட்டுப்பாட்டோடு ஒடுக்கும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறார்கள் விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்கம். மத்திய அரசின் உதவியோடு திருட்டு இணைய தளங்களையும் முடக்க போகிறோம்.

IMG_9032

அதனால் இனி இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் மாதிரி பலரும் வெளிநாட்டில் இருந்து படமெடுக்க தைரியமாக தமிழ்நாட்டுக்கு வரலாம். இந்த திருட்டு விசிடியின் ஆதிக்கம் எப்படி இருக்கிறது என்பதற்காக முல்லா கதையொன்றை சொல்கிறேன்.

ஒரு முறை வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பிய முல்லாவுக்கு பெரிய அதிர்ச்சி. காரணம், அவர் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் திருடு போய்விட்டன. திருடினது யார் என்று விசாரித்து தெரிந்து கொண்ட முல்லா, அந்த திருடனின் வீட்டிற்கே சென்று படுத்துக் கொண்டார்.

இதனால் பிரச்சினை பெரிதாகி பஞ்சாயத்துக்கு வந்த்து. அப்போது, ‘என் வீட்டில் இவர் வந்து படுத்துக் கொண்டார். இவரை வெளியேறச் சொல்லுங்கள்’ என்றான் திருடன். முல்லாவோ, ‘என் வீட்டில் இருந்த எல்லா பொருட்களும் இப்போது இந்த்த் திருடன் வீட்டில்தான் இருக்கின்றன. என் பொருட்கள் இருக்கும் இடம்தானே என் வீடு. ஆக, இது என் வீடுதானே..? அதனால்தான் நான் இங்கேயே வந்து தங்கிக் கொண்டேன்..’ என்றாராம்.

இதுபோல புதிய திரைப்படங்களை இப்படி அனுமதி பெறாமல் திரையிடும் கேபிள் டிவி மற்றும் சொகுசு பேருந்துகளை கைப்பற்றி தயாரிப்பாளர்களுக்கே சொந்தமாக்கிவிட வேண்டும். அப்போதுதான் திருடர்களுக்கு பயம் வரும்.

சினிமாவுக்கு சில விதிவிலக்குகள் வேண்டும், சினிமாவில் விலங்குகளை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். விலங்குகளை நாங்கள் யாரும் தெரிந்து துன்புறுத்தப் போவதில்லை. இருந்தாலும் இந்த அனிமல் வெல்பர் போர்டு ரொம்பவே கெடுபிடி செய்கிறது.

படத்தில் ஒரு காட்சியில் ஒரு நாய் குறுக்கே போனால்கூட அந்த நாய் இப்போ உசிரோட இருக்குன்னு சர்டிபிகேட் வாங்கிட்டு வாங்கன்றாங்க. இப்போ மட்டும் சாண்டோ சின்னப்ப தேவர் உயிரோடு இருந்திருந்தால் அவரே நேரடியா போய் சண்டை போட்டு அந்த உத்தரவை ரத்து செய்ய வைத்திருப்பார்.

யானை, கழுதை, குதிரைகளையெல்லாம் ராணுவத்துக்கு பயன்படுத்துகிறார்கள். நாம மட்டும் சினிமாவில் இவைகளை பயன்படுத்தக் கூடாதா..? என்னங்க ஸார் உங்க சட்டம்..? தயாரிப்பாளர் சங்கம் விரைவில் இந்தப் பிரச்சினைக்கும் ஒரு முடிவு கட்டும்.

இந்தப் படம் வந்த பின்னாடி எல்லாரும் ‘ஏண்டா தலைல எண்ணெய் வைக்கல..?’ ‘ஏண்டா முடியை கட் பண்ணல..?’ ‘ஏண்டா செருப்பை தைக்கலை..?’ ‘ஏண்டா ஆத்துல தெர்மாக்கோல போட்டீங்க..?’ என்று விதம்விதமான கேள்விகளை நிச்சயமாக எழுப்புவார்கள்…” என்றார் தனக்கே உரித்தான குசும்புடன்..!

backyaraj-1

“நான் சிங்கப்பூர் சென்றிருந்தபோது ஒரு நாடகம் பார்த்தேன். நம்ம ஊரில்கூட அந்த மாதிரி சென்சிட்டிவான நாடகங்களை நடத்த முடியாது. திறமை இருப்பவர்கள் எங்கிருந்தாலும் வரவேற்கப்பட வேண்டியவர்கள். படத்தின் நாயகன் அசார் நல்ல இடத்துக்கு நிச்சயம் வருவார். தமிழ் சினிமாவில் இருக்கும் பிரச்சினைகள் ஓய்ந்து நல்ல எல்லா தயாரிப்பாளர்களும் படம் தயாரிக்க ஏற்ற நல்ல சூழ்நிலை கூடிய விரைவில் வரும்…” என்றார் இயக்குநர் பாக்யராஜ்.

“தலைக்கு எண்ணெய் வைக்காததால், கதாநாயகன் ஒரு பிரச்சனையில் மாட்டி கொள்கிறார். என்ன அந்த பிரச்சனை..? அதில் இருந்து எப்படி கதாநாயகன் தப்பிக்கிறார் என்பதுதான்  படத்தின் கதை. படத்தின் இரண்டாம் பாதியில் வரும் காட்சிகள் அனைத்துமே தமிழ் சினிமாவில் இதுவரை கண்டிராத புதுமையான காட்சிகள்  இருக்கும்.

IMG_8774

ரெஹானா மேடம் உண்மையை முகத்துக்கு நேரே பேசக் கூடியவர். எனக்கும், ரெஹானா மேடத்துக்கும் இடையில் எப்போதும் சண்டை வந்து கொண்டே இருக்கும். ஒரு சீனியர் என்ற எந்த பந்தாவும் இல்லாமல் நடித்துக் கொடுத்த  மன்சூர் அலிகான் மனதளவில் ஒரு குழந்தை…” என்றார் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்.

விழாவில் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி, தயாரிப்பாளர் ஜி.கே.ரெட்டி, டான்ஸ் மாஸ்டர் கலா, சிங்கப்பூர் தீபன், எடிட்டர் சி.எஸ்.பிரேம், நாயகன் அசார், நாயகி சஞ்சிதா ஷெட்டி, ஒளிப்பதிவாளர் வம்சிதரன், நடிகர் ஜெயராமின் மனைவி பார்வதி ஜெயராம், ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.

Our Score