full screen background image

லிவிங் டூ கெதர் கலாச்சாரத்தை கண்டிக்கும் திரைப்படம்..!

லிவிங் டூ கெதர் கலாச்சாரத்தை கண்டிக்கும் திரைப்படம்..!

நூற்றுக்கும் மேற்பட்ட மொழி மாற்று படங்களை தமிழாக்கம் செய்ததுடன் தமிழகம் முழுவதும் வியோகம் செய்ததுடன், பல படங்களை தயாரித்த அனுபவமும் உள்ளவர் ஏ.ஆர்.கே.ராஜராஜா. இவர் இப்போது ஜெய் சினிமாஸ்-ரசி மீடியா இணைந்து தயாரிக்கும் ‘யாவும் காதலே’ என்ற படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.

இந்த படத்தில் சுப்பு கதாநாயகனாக நடிக்கிறார். இவர் ‘மத்தாப்பு’ படத்தில் நாயகனாக அறிமுகமானவர். இன்னும் இரண்டு நாயகர்களாக சிவா, பர்தேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள். கதாநாயகிகளாக ரஞ்சனா மிஸ்ரா-சிம்மிதாஸ் இருவரும் நடிக்கிறார்கள். இவர்களுடன் எமி ஜாக்சன் போலவே, பிரெஞ்ச் நடிகை காத்ரின் ஜாக்சன் என்ற புதுமுக நடிகை நடிக்கிறார். மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – எஸ்.சக்திவேல்

இசை – வல்லவன்

பாடல்கள் – கலைக்குமார், சொற்கோ, அஸ்மின், கலாராஜன், மீனாட்சி சுந்தரம், ராஜகவி ராகில்

கலை – விஜய்ராஜன்

நடனம் – கூல் ஜெயந்த், ஜாய்மதி

எடிட்டிங் – அகமது

தயாரிப்பு நிர்வாகம் – முகமது அலி

தயாரிப்பு மேற்பார்வை – சேனாதிபதி

இணை இயக்கம் – பிரதீப்ராம்

தயாரிப்பு – சங்கர். எம்.ஜெய் – ரசிக்குட்டி

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ஏ.ஆர்.கே.ராஜராஜா.

படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்…..

“பெரியோர்களால் நிச்சயம் செய்து திருமணம் செய்து வாழ்வது நமது பாராம்பர்ய கலாச்சாரம்..இன்று காலம் மாறிப் போய் திருமணதிற்கு முன்பே ஒன்றாய் வாழ்ந்து அதற்க்கு பிறகு பிடித்திருந்தால் திருமணம்… இல்லையென்றால் நீ உன் வேலையை பார்.. நான் என் வேலையை பார்க்கிறேன் என்று சொல்லும் கலாச்சாரம்… ஸாரி புது கலாச்சாரம்..! வாழ்ந்து பார்த்துட்டு கல்யாணம் பண்ணிக்கலாம்ங்கிற மோசமான கலாச்சாரம். இன்று வேகமான வைரஸ் மாதிரி பரவிக் கொண்டிருகிறது. அது எது மாதிரி என்பதை காமெடி கலந்து பொழுது போக்கு படமாக உருவாக்கி கொண்டிருக்கிறோம். சென்னையில் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்றுக் கொண்டிருகிறது…” என்றார் இயக்குநர் ஏ.ஆர்.கே.ராஜராஜா.

Our Score