full screen background image

பழம்பெரும் இயக்குநரின் பேரன் இயக்குநராக அறிமுகமாகும் ‘யார் இவன்’

பழம்பெரும் இயக்குநரின் பேரன் இயக்குநராக அறிமுகமாகும் ‘யார் இவன்’

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் நடிப்பில் உருவான ‘படகோட்டி’, நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்களின் நடிப்பில் உருவான ‘உத்தமபுத்திரன்’ உள்ளிட்ட பல படங்களை இயக்கிய தமிழின் மிக மூத்த இயக்குநர்களில் ஒருவரான T.பிரகாஷ்ராவ் அவர்களின் பேரன் T.சத்யா ‘யார் இவன்’ என்ற தமிழ்ப் படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் புதிய இயக்குநராக அறிமுகமாகிறார்.

ஏற்கெனவே தெலுங்கில் ‘பீமிலி கபடி ஜட்டு’, ‘எஸ்.எம்.எஸ். ஷங்கரா’ ஆகிய படங்களை இயக்கி பெரும் வெற்றியை கண்ட இயக்குநர் T.சத்யா இயக்கும் முதல் தமிழ் படம் ‘யார் இவன்’. 

இந்தப் படத்தில் சச்சின் நாயகனாகவும் ஈஷா குப்தா நாயகியாகவும் நடிக்கின்றனர். மேலும் பிரபு, சதீஷ், தன்யா பாலகிருஷ்ணன், சுப்ரீத் ரெட்டி, சத்ரு, டெல்லி கணேஷ், ஹாரிஸ், வெண்ணிலா கிஷோர், கிஷோர் குமார் உள்ளிட்டவர்களும் படத்தில் நடித்துள்ளனர். 

விளம்பர டிஸைன்ஸ் – வெங்கட், பி.ஆர்.ஓ.-நிகில், நிர்வாகத் தயாரிப்பு – சிவபிரசாத் குடிமிட்லா, சண்டை பயிற்சி – கனல் கண்ணன், படத் தொகுப்பு – பிரவின் புடி, ஒளிப்பதிவு – பினேந்திரா மேனன், இசை – எஸ்.எஸ்.தமன், பாடல்கள் – நா.முத்துக்குமார், தயாரிப்பாளர் – ரெய்னா ஜோஷி, எழுத்து, இயக்கம் – டி.சத்யா.

‘யார் இவன்’ ஒரு காதல் கதை கலந்த மர்ம த்ரில்லர் திரைப்படம். சுவாரசியமான ஆக்‌ஷன் த்ரில்லர் படத்திற்கேற்ற திரைக்கதையில் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. 2017 ஏப்ரல் மாதத்தில் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Our Score