full screen background image

நடன இயக்குநர் ‘காதல்’ கந்தாஸ் இயக்கும் ‘யாளி’ திரைப்படம்

நடன இயக்குநர் ‘காதல்’ கந்தாஸ் இயக்கும் ‘யாளி’ திரைப்படம்

A.B Creations சார்பில் நடிகை அக்‌ஷயா தயாரிக்கும் முதல் தமிழ் படம் ‘யாளி’. இவர் ஏற்கனவே ‘கலாபக் காதலன்’, ‘உளியின் ஓசை’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.

இந்தப் படத்தைத் தயாரிப்பதோடு கதையையும் அக்‌ஷயாவே எழுதியிருக்கிறார். பிரபல நடன இயக்குநரான ‘காதல்’ கந்தாஸ் திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.

Yaali-Movie-Pooja-Stills-2

இவர், ‘காதல்’, ‘வெயில்’, ‘அங்காடி தெரு’, ‘எம்மகன்’, ‘நான் மகான் அல்ல’, ‘டார்லிங்’ போன்ற படங்களுக்கு நடன இயக்குநராக பணி புரிந்தவர். இவர் ஏற்கனவே ‘நீநா தேநா’ என்ற நேரடி கன்னட வெற்றி படத்தை இயக்கியவர். இது இவருடைய இரண்டாவது இயக்கம்.  தமிழில் முதல் திரைப்படமாக இயக்குகிறார்.

படம் பற்றி பேசிய இயக்குநர் காதல் கந்தாஸ், “இந்த ‘யாளி’ திரைப்படம் காதல், காமெடி கலந்த த்ரில்லர் படம். இதில் தமன், அக்‌ஷயா, அர்ஜுன், மனோபாலா, ஊர்வசி ஆகியோர் நடிக்கின்றனர்.

இப்படத்தில் இசையமைப்பாளராக S. மோகன்ராம் அவர்களை அறிமுகப்படுத்துகிறோம். பாடல்கள் மலேசியாவில் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒளிப்பதிவு – சீனிவாசா ராமையா. இவர் ‘நீநா தேநா’ கன்னட படத்தின் ஒளிப்பதிவாளர். பாடல்கள் – கவிப்பேரரசு வைரமுத்து. எடிட்டிங் – சந்திரகுமார். தயாரிப்பு மேற்பார்வை – J.பிரபாகர். நிர்வாக தயாரிப்பு : கவிதா வாணிலட்சுமி. கலை : மோகன மகேந்திரன். மக்கள் தொடர்பு – நிகில்.

முழு திரைப்படமும் மலேசியாவில் உள்ள பினாங்கு, மலாக்கா, லங்காவி, டாப்பிங், ஜெண்டிங் மற்றும் கோலாலம்புர் பகுதிகளில் மிக பிரம்மாண்டமாக படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வரும் ஜூன் 27 முதல் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது. இந்தாண்டு இறுதியில் படம் வெளியாகும்…” என்றார்.

Our Score