‘யாக்கை’ திரைப்படம் மார்ச் 3-ம் தேதி வெளியாகிறது

‘யாக்கை’ திரைப்படம் மார்ச் 3-ம் தேதி வெளியாகிறது

‘பிரிம் பிச்சர்ஸ்’ நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் முத்துக்குமரன் தயாரித்துள்ள திரைப்படம் யாக்கை. இதில் கிருஷ்ணாவும், ஸ்வாதி ரெட்டியும் ஹீரோ, ஹீரோயினாக நடித்துள்ளனர்.

இந்த ‘யாக்கை’ திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருவது மேலும் சிறப்பு. “ஜோக்கர்’ திரைப்படம் குரு சோமசுந்தரத்திற்கு ஒரு முனை என்றால், ‘யாக்கை’ திரைப்படம் இதுவரை யாரும் கண்டிராத அவருடைய மறு முனை. ‘யாக்கை’ படம் மூலம் முற்றிலும் ஒரு புதுமையான குரு சோமசுந்தரத்தை ரசிகர்கள் காண இருக்கிறார்கள்.

krishna-swathi reddy-1

இது பற்றி பேசிய இயக்குநர் குழந்தை வேலப்பன், “நடிப்பிற்காக எந்த அவதாரம் வேண்டுமானாலும் எடுக்கும் கலைஞரான குரு சோமசுந்தரம், எங்கள் ‘யாக்கை’ படத்தில் நடிப்பது எங்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது. அதிரடி, மிரட்டல் என ஒரு சராசரியான வில்லனாக இல்லாமல் முற்றிலும் வித்தியாசமான வில்லனாக குரு சோமசுந்தரம் எங்களின் ‘யாக்கை’ படத்தில் நடித்து வருகிறார்.

ஒரு தப்பான சூழ்நிலையை உருவாக்குபவன்தான் ‘யாக்கை’ படத்தின் வில்லன். அந்த கதாப்பாத்திரத்தை கனகச்சிதமாக உள்வாங்கி அற்புதமாக நடித்து வருகிறார் குரு சோமசுந்தரம். நிச்சயமாக அவருடைய இந்த வில்லன் கதாப்பாத்திரம் அனைத்து தரப்பு ரசிகர்களின் பாராட்டுகளையும் பெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

‘யாக்கை’ படத்தின் இறுதி பதிப்பை பார்த்தவர்கள்,  எங்களுக்கு  ஒருவிதமான புத்துணர்ச்சியை அளித்துள்ளனர். உன்னதமான தொழிலாக அனைவராலும் கருதப்படும் மருத்துவ துறையில் நடக்கும் மோசடிகளை இந்த ‘யாக்கை’ படம் மூலம்  வெளிச்சத்திற்கு கொண்டு வந்து இருக்கின்றோம்.

மருந்துகள் மீதும், மருத்துவத்தின் மீதும், குருட்டுத்தனமான நம்பிக்கை வைத்து ஏமாறும்  மக்களுக்கு சிறந்ததொரு விழிப்புணர்வு திரைப்படமாக எங்களின் ‘யாக்கை’ இருக்கும்.

இளைஞர்கள் பலர் இணைந்து  விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வரும் இந்த நாட்களில் வெளியாகும் எங்களின்  ‘யாக்கை’ திரைப்படம், நிச்சயமாக மருத்துவம் சார்ந்த விழிப்புணர்வை மக்கள் உள்ளங்களில் விதைக்கும்” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் இயக்குநர் குழந்தை வேலப்பன்.

Our Score