இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ‘woolfell’ என்ற அனிமேஷன் படம் மூலம் சர்வதேச அரங்கில் தடம் பதிக்கிறார்.
பிரபாகரன் ஹரிஹரன் என்ற புதிய இயக்குனரின் தயாரிப்பிலும், இயக்கத்திலும் உருவாகும் ‘woolfell’ திரைப்படம் இந்திய தொழில் நுட்பக் கலைஞர்களை உலக அரங்கில் அறிமுகம் செய்கிறது.
அறிமுக இயக்குநரான. பிரபாகரன் ஹரிஹரன் மறைந்த நடிகர் எம்.ஆர்.ஆர்.வாசுவின் பேரன் என்பதும், அவர் சர்வதேச அளவில் சினிமா துறையிலான மேற்படிப்பு முடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி நிர்வாக இயக்குநராகப் பணியாற்றிய திவ்யா வேணுகோபால் இந்தப் படத்திற்கு கதை எழுதியிருக்கிறார். தேசிய விருது பெற்ற எடிட்டர் கே.எல்.பிரவீன் ‘woolfell’ படத்திற்கு தொகுப்பாளராகப் பணியாற்றுகிறார்.
‘விஸ்வரூபம்’, ‘உத்தமவில்லன்’, மற்றும் ‘whiplash’ என்ற ஆங்கில படத்தில் சிறப்பு ஒலி வடிவமைப்பாளராகப் பணியாற்றிய குணால் ராஜன் இந்தப் படத்திலும் ஒலி வடிவமைப்பாளராகப் பணியாற்றுகிறார்.
இந்த ‘woolfell’ படத்தின் போஸ்டர் நேற்று இணையத்தில் வெளியாகி படத்தின் மேல் உள்ள ஆர்வத்தை தூண்டியது.
வெகு விரைவில் பல்வேறு சர்வதேச நட்சத்திரங்களுடன், நமது நடிகர்களும் இணைந்து நடிக்கவுள்ள இந்த ‘woolfell’ படத்தின் படப்பிடிப்புப் விரைவில் பணிகள் துவங்க உள்ளன.










