பூம்பாரை முருகன் புரடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில் கயல் ஆனந்தி கதாநாயகியாக நடித்திருக்கும் திரில்லர் படம் ’ஒயிட் ரோஸ்’.
இந்தப் படத்தில் கயல் ஆனந்தி, ஆர்.கே.சுரேஷ், விஜித், பேபி நக்ஷத்திரா, சசிலயா, கணேஷ், ராமநாதன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இயக்குநர் – ராஜசேகர், தயாரிப்பாளர் – ரஞ்சனி, தயாரிப்பு – பூம்பாரை முருகன் புரடக்ஷன்ஸ், பாடல்கள் – வைரமுத்து, ஜோகன் செவனேஷ், ஒளிப்பதிவு – இளையராஜா, இசை – சுதர்ஷன், கலை இயக்கம் – டி.என்.கபிலன், பத்திரிக்கை தொடர்பு – சுரேஷ் சந்திரா.
இப்படத்தின் மூலமாக சுசி கணேசனின் உதவியாளர் ராஜசேகர் இயக்குநராக அறிமுகம் ஆகிறார்.
இக்கதையில் காவல் கட்டுபாட்டு மையம் முக்கிய பங்கு வகுக்கிறது. அது தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக, பல லட்ச ரூபாய் செலவில் செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்றது.
இதன் படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டிற்குத் தயாராகி இருக்கிறது.
படம் வரும் ஏப்ரல் 5-ம் தேதியன்று வெளியாகும் எனப் படக் குழு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது.









