ரஜினி அமெரிக்கா செல்வது எப்போது..?

ரஜினி அமெரிக்கா செல்வது எப்போது..?

தற்போது தமிழ் திரையுலகத்தில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வரும் மாஸ் திரைப்படம் ‘அண்ணாத்த’ என்பதால் அனைவரின் கவனமும் அந்தப் படத்தின் மீது பாய்ந்துள்ளது.

‘அண்ணாத்த’ படத்தின் ஷூட்டிங் திட்டமிட்டபடி வரும் 10-ம் தேதி முடிவடைய வேண்டும். ஆனால் அதன் பின்னாலும் ஷூட்டிங் நடக்கும்போல தெரிகிறது. ஏனெனில், ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு சற்று மெதுவாகே நடந்து வருகிறதாம்.

கொரோனா பாதிப்பினால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக தினமும் ஷூட்டிங் துவங்கும்போது பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து.. ஒவ்வொருவரின் உடல் தட்பவெப்ப நிலையை செக் செய்து.. பதிவு செய்து.. சானிடைசரைப் பயன்படுத்தி அனைத்து இடங்களையும் சுத்தம் செய்துவிட்டு படப்பிடிப்பைத் துவக்கவே காலையில் கால தாமதம் ஆகிறதாம். அதோடு இரவிலும் இதே வேலையை திரும்பவும் செய்வதால் லேட்டாக ஆரம்பித்து சீக்கிரமாக முடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் ‘அண்ணாத்த’ படப்பிடிப்புக் குழுவினர்.

ஆனால், எப்படியிருந்தாலும் மீண்டும் ஒரு முழு லாக் டவுன் வந்தாலும் வரலாம் என்ற எண்ணத்தில் எப்படியாவது ஒரே மூச்சில் படப்பிடிப்பை முடித்துவிட்டு வருமாறு தயாரிப்பு நிறுவனம் உத்தரவிட்டுள்ளதாம்.

இந்தப் பிரச்சினைக்கிடையில் ரஜினி மீண்டும் அமெரிக்கா போக வேண்டியிருக்கிறது என்கிறார்கள். அவரது உடல் நிலையை பரிசோதிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால்.. கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்து 5 ஆண்டுகள் நிறைவடையப் போவதால் பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு செல்லவிருக்கிறாராம் ரஜினி.

இதை முன்பேயே திட்டமிட்டு தற்போது அமெரிக்கா சென்றுள்ள தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் ரஜினியை வரவேற்கத் தயாராக இருக்கிறார்கள்.

‘அண்ணாத்த’ படத்தின் டப்பிங் பணியை இந்த மாதக் கடைசிக்குள் முடித்துவிட்டு ரஜினி அமெரிக்கா கிளம்புவார் என்று உறுதியாகச் சொல்கிறார்கள்.

Our Score