full screen background image

விஷ்ணு மஞ்சு நடிக்கும் பான் இந்தியா படம் ‘ஜின்னா’..!

விஷ்ணு மஞ்சு நடிக்கும் பான் இந்தியா படம் ‘ஜின்னா’..!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷ்ணு மஞ்சு, தயாரிப்பாளர், தொழிலதிபர் என பன்முக திறன் கொண்டவராகவும் வலம் வருகிறார்.

அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரக் கூடிய தரமான திரைப்படங்களில் நடித்து வருவதோடு, ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தும் பல படங்களில் நடித்தும் வருகிறார்.

இந்த நிலையில், ஏ.வி.ஏ.எண்டர்டெயின்மெண்ட் என்ற புதிய திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நடிகர் விஷ்ணு மஞ்சு தொடங்கியுள்ளார்.

இந்நிறுவனம் மூலம் திறமை மிக்க புதியவர்களுக்கு வாய்ப்பளிப்பதோடு, வித்தியாசமான முயற்சிகள் மற்றும் புதிய சிந்தனைகளுக்கு வாய்ப்பளித்து ஊக்கம் அளிக்க விஷ்ணு மஞ்சு முடிவு செய்துள்ளார்.

மேலும், இந்நிறுவனம் திரைப்படங்கள் தயாரிப்பு மட்டுமின்றி… இணைய தொடர்கள், ஆவணப் படங்கள், டாக்குமெண்டரி மற்றும் சர்வதேச தரத்திலான குறும் படங்கள் தயாரிப்புகளிலும் ஈடுபட உள்ளது.

ஏ.வி.ஏ. எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் முதல் படத்தின் பெயர் ஜின்னா’. இது மிகப் பெரிய பொருட்செலவில் பிரம்மாண்டமான பான் இந்தியா திரைப்படமாக உருவாகிறது.

விஷ்ணு மஞ்சு ஹீரோவாக நடிக்கும் இந்த ‘ஜின்னா’ படத்தில் சன்னி லியோன், பயல் ராஜ்புட் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடிக்கிறார்கள்.

தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் இந்தி என நான்கு மொழிகளில் உருவாகும் இந்த ‘ஜின்னா’ விஷ்ணு மஞ்சுவின் 19-வது திரைப்படமாகும்.

திரைப்பட தயாரிப்பில் ஈடுபட உள்ள இந்த நிறுவனத்துடன் கூடவே, ஏ.வி.ஏ.மியூசிக் மற்றும் ஏ.வி.ஏ.ஸ்டுடியோஸ் என்ற புதிய இரண்டு நிறுவனங்களையும் விஷ்ணு மஞ்சு தொடங்குகிறார்.

இதில் ஏ.வி.ஏ. மியூசிக் நிறுவனம் மூலம் சுயாதீன தனி இசை பாடல்கள், இசை ஆல்பங்கள் மற்றும் தரமான மற்றும் ரசிகர்களுக்கான இசை படைப்புகளை உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.

ஏ.வி.ஏ. ஸ்டுடியோஸ் மூலம் சினிமா துறைக்கான அதி நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய உள் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதோடு, தொழில் நுட்ப ரீதியிலான தரம் மிக்க திரைப்படங்களை உருவாக்கி கொடுக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

இந்த புதிய நிறுவனங்கள் அனைத்தும் நேற்று ஜூன் 10-ம் தேதி துவக்கப்பட்டன.

Our Score