சில நாட்களுக்கு முன்னால் திடீரென்று நடிகர் சங்கத்தின் லெட்டர்பேடில் ஒரு கடிதம் பத்திரிகையாளர்களை வந்தடைந்தது.
தங்களது சங்க உறுப்பினர்களான திரு.நாசர், திரு.சந்தானம், திரு.விஷால் ஆகிய மூவரைப் பற்றி அவதூறாக எழுதி ஒரு அனாமதேய கடிதம் வெளிவந்திருப்பதாகவும்.. இது பற்றி நடிகர் சங்கம் தனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டிருந்தது.
அந்தக் கடிதத்தில் என்ன இருந்தது என்பதெல்லாம் தெரியாமல் இருந்ததால், அதிகம் பேர் அதில் ஆர்வம் காட்டவில்லை. இப்போது அந்தக் கடிதமே இணையத்தில் ‘லீக்’ செய்யப்பட்டிருக்கிறது. படித்துப் பார்க்கும்போது அச்சங்கத்துடன் தொடர்புடைய யாரோ ஒருவர்தான் இதனை எழுதியிருக்க முடியும் என்பது உறுதியாகத் தெரிகிறது..
4 மாதங்களுக்கு முன்பாக காமராஜர் அரங்கத்தில் நடைபெற்ற நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்திற்கு முன்பே நடிகர் விஷால் தலைமையில் சந்தானம், நாசர், சூர்யா, கார்த்தி, சிவக்குமார் கொண்ட டீம் சில சொத்து விவகாரங்களையும், நடிகர் சங்க கட்டிடம் தொடர்பான ஆவணங்களையும் கேட்டு பிரச்சினை எழுப்பியதாக செய்திகள் வெளிவந்தன. சங்கத்தின் செயலாளர் ராதாரவியும் இதனை ஒப்புக் கொண்டு, நாசர், சந்தானம், விஷால் பற்றி சில பத்திரிகைகளில் விமர்சனமும் செய்திருந்தார். அதன் பின்பு பொதுக்குழுவில் வழக்கம்போல கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கு சரியான பதில்கள் பெறப்பட்டுவிட்டதாக விஷால் தரப்பினர் கூறி ஒருவருக்கொருவர் கை குலுக்கி, மிட்டாய் சாப்பிட்டுவிட்டு கலைந்துவிட்டனர்.
இப்போது 4 மாதங்கள் கழித்து இந்தப் பிரச்சினை ஏன் எழுந்திருக்கிறது என்றுதான் தெரியவில்லை. ஒருவேளை ‘மழைவிட்டும் தூவானம் விடலை’. அல்லது ‘நெருப்பில்லாமல் புகையாது’.. இந்த இரண்டில் ஒன்றுதான் இதற்குக் காரணமாக இருக்கும் என்கிறார்கள் திரையுலகினர்..
அக்கடிதங்கள் இங்கே.. முழுமையாகப் படிக்க விரிவாக்கிப் பார்க்கவும்..
நடிகர் சந்தானத்தின் பெயருக்கு வந்த கடிதம்
நடிகர் விஷாலுக்கு வந்த கடிதம்
நடிகர் நாசருக்கு வந்த கடிதம்