இப்போதெல்லாம் இளம் ஹீரோக்கள் அடுத்தடுத்து தொடர்ச்சியாக படங்களை செயது கொண்டிருக்கவே விரும்புகிறார்கள். ஒரு படம் முடிவதற்குள் அடுத்தப் படத்தின் அறிவிப்பு வந்துவிடுகிறது. இவ்வளவு வேகத்தில் போனால்தான் வயதும், இளமையும் இருக்கிறவரைக்குள் ஒரு ரவுண்டு வந்துவிட முடியும் என்பதால்தான்..!
‘விஷால்’ இப்போது யூ டிவி தயாரிப்பில், ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தி்ல் லஷ்மி மேனனுடன் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தை முடித்துவிட்டு உடனடியாக இயக்குநர் ஹரியுடன் இணைகிறாராம்.. ‘சிங்கம்-2’ படத்தின் அத்ரிபுத்ரி வெற்றிக்குப் பிறகும் உடனடியாக படம் எதுவும் செய்யாமல் இருந்த ஹரி, தோதான நடிகர்களைத் தேடிக் கொண்டிருந்தார்.
விக்ரம், கார்த்தி இருவரிடமும் பேசியிருந்த நிலையில் தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் படம் செய்யும் வாய்ப்பு கிடைக்கவே அங்கே ஓடினார். ஆனால் அது ஆரம்பித்த வேகத்தில் முடங்கிப் போக.. திரும்பவும் கோடம்பாக்கம் ரிட்டர்ன்ஸ்.. சூர்யா அடுத்தடுத்த கமிட்மெண்ட்டுகளில் இருக்க.. விக்ரம் ஐ-யில் இருந்து வெளியேறாமல் இருக்க.. கார்த்தி தனது அடுத்தடுத்த படங்களை அறிவித்துவிட.. விஷால்தான் இப்போது ஹரிக்கு ஹீரோவாகியிருக்கிறார். ஏற்கெனவே தாமிரபரணியில் இதே கூட்டணி ஹிட்டடித்தது நியாபகம் இருக்கலாம்..
‘பாண்டியநாடு’ படத்தின் வெற்றிக்குப் பிறகு விநியாகஸ்தர்களிடையே விருப்பப்படும் ஹீரோவாக ஆகியிருக்கிறார் விஷால். இப்போது சிங்கம்-2 ஹரியும் இணைந்திருப்பதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பை இப்போதே எகிறுகிறது.. இதில் விஷாலுக்கு ஜோடி ஸ்ருதி கமல். தமிழுக்கு ‘வாம்மா.. வாம்மா’ என்று பாக்கு, வெத்திலை வைத்து அழைத்தும் வராமல் டபாய்த்த ஸ்ருதி, விஷாலுக்கு டபுள் ஓகே சொல்லியிருக்கிறார்..!
‘விஷால் பிலிம் பேக்டரி’ என்ற தனது சொந்த பேனரிலேயே தமிழ், தெலுங்கு என்று இருமொழிப் படமாக இதனைத் தயாரிக்கிறார் விஷால். யுவன்சங்கர்ராஜா இசை.. நா.முத்துக்குமாரின் பாடல்கள் என்று ஹிட்டான அத்தனையையும் வைத்துக் கொண்டு களமிறக்குகிறார்களாம்..!
ஆல் தி பெஸ்ட் டூ விஷால்..!