கார்த்திகேயன் பெருமையுடன் வழங்க மேக் 5 ஸ்டுடியோஸ் என்ற பட நிறுவனம் அதிகப் பொருட்செலவில் தயாரித்துள்ள படம் ‘விளையாட்டு ஆரம்பம்’.
இந்த படத்தில் யுவன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஸ்ராவியா நடிக்கிறார். மற்றும் ரியாஸ்கான், பவர்ஸ்டார் சீனிவாசன், பானுசந்தர், விஜய்ஆனந்த், எலிசபெத் ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு அனுஜாவும் இந்தப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
ஒளிப்பதிவு – அருண்மொழி சோழன், இசை – ஸ்ரீகாந்த் தேவா, பாடல்கள் – ருக்சீனா, இந்துமதி, எழில்வேந்தன், தென்றல், ஸ்ரீகாந்த்தேவா, கலை – A.S.சாமி, நடனம் – பாபி, தினேஷ், இருசன், அபீப், சண்டை பயிற்சி – ஹரி தினேஷ், படத் தொகுப்பு – எஸ்.பி.அகமது, தயாரிப்பு நிர்வாகம் – கார்த்திக், தயாரிப்பு மேற்பார்வை – ஆத்தூர் ஆறுமுகம், ரபீக், கதை – பெரோஸ்கான், தயாரிப்பு – ஆனந்த் உதார்கர், கார்த்திகேயன், எழுத்து, இயக்கம் – விஜய் R. ஆனந்த், A.R.சூரியன்.
படம் பற்றி இயக்குநர்கள் பேசும்போது, “இது ‘சதுரங்க வேட்டை’ மாதிரியான படம். ஆனால் ‘சதுரங்க வேட்டை’ ஆன்லைன் வர்த்தகத்தின் எதிர்மறையான விஷயங்களை பதிவு செய்தது.
ஆனால் ‘விளையாட்டு ஆரம்பம்’ படத்தில் ஆன்லைன் வர்த்தகத்தில் உள்ள நிறைவான விஷயங்களை இதில் பதிய வைத்திருக்கிறோம். ஒரு நாடு வல்லரசு நாடாக உருவாக வேண்டுமானால் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ஒரு காரணமாக இருக்கும் என்கிற நேர்மறையான விஷயங்கள்தான் படத்தின் மையக் கரு..!
இந்தப் படத்தின் படப்பிடிப்பு மதுரை, திருச்சி, நாமக்கல் போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது. பாடல் காட்சிகள் சென்னை, பாங்காக் போன்ற இடங்களில் மிகப் பிரமாண்டமாக படமாக்கப்பட்டுள்ளது…” என்றார்கள்.