full screen background image

‘விக்ரம்’ படத்தில் கொள்ளை லாபம் பார்த்த தயாரிப்பாளர் கமல்ஹாசன்..!

‘விக்ரம்’ படத்தில் கொள்ளை லாபம் பார்த்த தயாரிப்பாளர் கமல்ஹாசன்..!

நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் நடிப்பில் அனிருத் இசையமைப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ‘விக்ரம்’ படம் கடந்த ஜுன்-3-ம் தேதி உலகம் முழுவதும் தியேட்டர்களில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத்தில் புதிய சாதனையை இந்த விக்ரம்’ படம் படைத்துள்ளது.

இந்தப் படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியானாலும் தொடர்ந்து தியேட்டர்களிலும் படம் ஓடியது. இந்தப் படத்தைத் தியேட்டர்களில் பார்க்கவே ரசிகர்கள் அதிகமாக ஆர்வம் காட்டி வந்ததால், இத்தனை நாட்களும் படம் தியேட்டரில் தாக்குப் பிடித்திருந்தது.

‘விக்ரம்’ படம் தியேட்டர்களில் ரிலீசாகி சமீபத்தில்தான் 75-வது நாளை நிறைவு செய்தது. இதைக் கொண்டாடும்விதமாக இந்தப் படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்றையும் படக் குழுவினர் வெளியிட்டார்கள். இதையும் ரசிகர்கள் வைரலாக்கி, டிரெண்டாக்கிவிட்டார்கள்.

ஜுன் மாத இறுதியிலேயே 155 கோடிகளை வசூல் செய்த இந்த ‘விக்ரம்’ படம், ஜுலை மாத இறுதியில் 411.89 கோடிகளை வசூல் செய்ததாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் அதற்கு பிறகு எத்தனை கோடிகளை விக்ரம்’ படம் வசூல் செய்தது என்ற தகவல் வெளியிடப்படவில்லை. இருந்தாலும் தற்போது 75 நாட்களை கடந்து விட்டதால், விரைவில் 100-வது நாளை எட்டும்.. 500 கோடி கிளப்பில் இணையும் என அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தரும் வகையில் ‘விக்ரம்’ படத்தின் வசூல் முடிவுக்கு வந்துவிட்டது.

காரணம், விக்ரம்’ படம் ரிலீசாகி நேற்றுடன் 88 நாட்கள் ஆன நிலையில், தற்போது அனைத்து தியேட்டர்களிலும் ‘விக்ரம்’ படம் தூக்கப்பட்டுவிட்டது.

இந்த நிலையில் இந்த படத்தின் மொத்த வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ‘விக்ரம்’ படம் உலகம் முழுவதும் உலகம் முழுவதும் தியேட்டர்களில் 432.50 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாகவும், இந்தியாவில் மட்டும் 307.60 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாகவும் தியேட்டர்கள் தரப்பில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த 307 கோடி ரூபாயில் விநியோகஸ்தரின் ஷேரையும் தாண்டி நடிகர் கமல்ஹாசனுக்கு மட்டும் படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில் 195 கோடி ரூபாய் லாபம் கிடைத்திருப்பதாகவும் திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Our Score