“இனிமேல் மலையாள சினிமாக்களில் பாடப் போவதில்லை” – பாடகர் விஜய் யேசுதாஸின் திடீர் முடிவு..!

“இனிமேல் மலையாள சினிமாக்களில் பாடப் போவதில்லை” – பாடகர் விஜய் யேசுதாஸின் திடீர் முடிவு..!

“இனிமேல் மலையாள மொழி படங்களில் பாடப் போவதில்லை” என்று பிரபல பின்னணிப் பாடகர் விஜய் யேசுதாஸ் கூறியுள்ளார்.

பிரபல பின்னணி பாடகரான காந்தர்வக் குரலோன்’ கே.ஜே.யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸூம் அப்பாவைப் போலவே பின்னணி பாடகராக இருக்கிறார்.

முதன்முதலில் வித்யாசாகர் இசையில் ஒரு தமிழ்ப் படத்தில் பின்னணிப் பாடகராக அறிமுகமானார் விஜய் யேசுதாஸ். பிறகு தொடர்ந்து இன்றுவரையிலும் பல்வேறு மொழிகளில் ஏராளமான படங்களில், நூற்றுக்கணக்கான பாடல்கள் பாடியிருக்கிறார்.

இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி எனப் பல மொழிகளில் சுமார் 300-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி இருக்கிறார் விஜய் யேசுதாஸ். மலையாளத்தில் 3 முறை சிறந்த பாடகருக்கான மாநில அரசின் விருதையும், 5 முறை பிலிம்பேர் விருதையும், நந்தி விருதினையும் பெற்றிருக்கிறார்.

இவர் ஒரு நடிகரும்கூட. தனுஷின் மாரி’ படத்தில் வில்லனாக நடித்தார். இந்தப் படத்தில் அவர் நடிப்பு கவனிக்கப்பட்டது. பின்னர் ‘படை வீரன்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். இதையடுத்து தொடர்ந்து படங்களில் நடிக்கவும் முயற்சி செய்து வருகிறார் விஜய் யேசுதாஸ்.

இந்நிலையில் சமீபத்தில் இவர் மலையாள பத்திரிகைளுக்கு அளித்திருக்கும் ஒரு பேட்டி கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

“மலையாள சினிமாவில் இசையமைப்பாளர்களுக்கும், பின்னணி பாடகர்களுக்கும் உரிய மரியாதை கிடைப்பதில்லை. அதனால், மலையாள சினிமாவில் இனி பாடப் போவதில்லை.

மலையாள சினிமாவில் பல முறை பலரிடமும் நான் அவமானப்பட்டுவிட்டேன். இனியும் அந்த அவமானங்களை என்னால் தாங்க முடியாது. என் அப்பாவுக்கும் இது போன்ற அவமானங்கள் நடந்திருக்கின்றன. தமிழ், தெலுங்கு மொழிகளில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அங்குப் பாடகர்களுக்கு மிகுந்த மரியாதை கொடுக்கின்றனர். அதனால் அங்கு தொடர்ந்து பாடுவேன்…” என்றும் கூறியுள்ளார்.

Our Score