விஜய் டிவி வருடந்தோறும் வழங்கி வரும் சிறந்த திரைப்படங்களுக்கான விஜய் அவார்ட்ஸ் 2014 பரிசளிப்பு நிகழ்ச்சி, நேற்று மாலை சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
விழாவில் பரிசு பெற்றவர்கள் விவரம் :
சிறந்த திரைப்படம் – தங்கமீன்கள்
சிறந்த நடிகர் – கமல்ஹாசன் (விஸ்வரூபம்)
சிறந்த மக்கள் விரும்பிய கதாநாயகன் – விஜய் (தலைவா)
சிறந்த நடிகை – நயன்தாரா (ராஜா ராணி)
சிறந்த புதுமுக நடிகர் – கவுதம் கார்த்திக் (கடல்)
சிறந்த புதுமுக நடிகை – நஸ்ரியா நஸீம் (ராஜா ராணி)
சிறந்த துணை நடிகர் – பாரதிராஜா (பாண்டிய நாடு)
சிறந்த துணை நடிகை – தன்ஷிகா (பரதேசி)
சிறந்த நகைச்சுவை நடிகர் – சந்தானம்
சிறந்த வில்லன் நடிகர் – அர்ஜூன் (கடல்)
சிறந்த ஒளிப்பதிவாளர் – ராஜீவ் மேனன் (கடல்)
சிறந்த எடிட்டர் – ஆண்டனி (பாண்டிய நாடு)
சிறந்த பின்னணி இசை – சந்தோஷ் நாராயணன் (சூது கவ்வும்)
சிறந்த நடன இயக்குநர் – பிருந்தா மாஸ்டர் (கடல்)
சிறந்த மேக்கப்மேன் – தசரதன் (பரதேசி)
சிறந்த காஸ்ட்யூம் டிஸைனர் – பூர்ணிமா (பரதேசி)
சிறந்த கலை இயக்கம் – லால்குடி இளையராஜா (விஸ்வரூபம்)
சிறந்த பாடலாசிரியர் – நா.முத்துக்குமார் (தெய்வங்கள் எல்லாம் – கேடி பில்லா கில்லாடி ரங்கா)
சென்ற ஆண்டின் சிறந்த பாடல் – அனிருத் ரவிச்சந்தர் (எதிர் நீச்சல்)
சிறந்த பின்னணிப் பாடகர் – யுவன் சங்கர் ராஜா (மரியான்)
சிறந்த பின்னணிப் பாடகி – சக்திஸ்ரீகோபாலன் –
சிறந்த வசனகர்த்தா – நவீன் (மூடர்கூடம்)
சிறந்த திரைக்கதை – நலன் குமாரசாமி (சூது கவ்வும்)
சிறந்த புதுமுக இயக்குநர் – அட்லீ (ராஜா ராணி)
சிறந்த இயக்குநர் – பாலா (பரதேசி)
நடுவர் குழுவின் இயக்குநர் சிறப்புப் பரிசு – கமல்ஹாசன் (விஸ்வரூபம்)
நடுவர் குழுவின் சிறப்புப் பரிசு – விஜய் சேதுபதி (சூது கவ்வும்)
செவாலியர் சிவாஜி கணேசன் விருது – இயக்குநர் ஷங்கர்
இந்திய சினிமாவின் கமர்ஷியல் கதாநாயகன் – ஷாரூக்கான்
பொதுவாக சினிமாவுலகில் இருப்பவர்களுக்கும், சினிமா விமர்சகர்களுக்கும் அறவே பிடிக்காமல் போன ‘கடல்’ படத்திற்கு 4 விருதுகளையும், தன்னுடைய சொந்தத் தயாரிப்பான ‘ராஜாராணி’ படத்திற்கு 3 விருதுகளையும் வழங்கியிருக்கும் விஜய் டிவிக்கு கண்டனக் குரல்களை எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள் நடுநிலையான ரசிகப் பெருமக்கள்..!
‘விடியும் முன்’, ‘மதயானைக் கூட்டம்’, ‘ஆதலால் காதல் செய்வீர்’, ‘நேரம்’, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘ஹரிதாஸ்’, ‘மெய்யழகி’ போன்ற படங்களை லிஸ்ட்டிலேயே எடுத்துக் கொள்ளாமல் வந்தவர்களுக்கு விருதுகள் என்பது போலவே இவர்களது தேர்வு அமைந்திருக்கிறது..!
அதிலும் செவாலியே சிவாஜி கணேசன் விருதை ஷங்கருக்கு கொடுத்ததுக்கு இந்தச் சந்தர்ப்பத்தில் கொஞ்சமும் பொருத்தமில்லை. ஷங்கர் இந்த விருதைப் பெறுவதற்கு இன்னமும் நிறைய காலம் இருக்கிறது.. அவரைவிடவும் மூத்த, அனுபவம் வாய்ந்த, சாதித்த கலைஞர்கள் பலர் திரையுலகில் இருக்கிறார்கள்..
விருதுகள் என்பது கொடுப்பவர்களுக்கும், வாங்குபவர்களுக்கும் மரியாதை கிடைப்பதாக இருக்க வேண்டும். ஆனால் இது, விஜய் தொலைக்காட்சிக்கு விளம்பரம் தரும் வியாபாரிகளுக்கு காட்சி தரும் சினிமாவாக அமைந்துவிட்டது..!