full screen background image

‘பரோல்’ படத்திற்கு வாய்ஸ் ஓவர் கொடுத்த விஜய் சேதுபதி

‘பரோல்’ படத்திற்கு வாய்ஸ் ஓவர் கொடுத்த விஜய் சேதுபதி

TRIPR ENTERTAINMENT நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் மதுசூதனன் தயாரித்துள்ள படம் ‘பரோல்’.

இந்தப் படத்தில் R.S.கார்த்திக், லிங்கா, கல்பிகா, மோனிஷா முரளி, வினோதினி வைத்தியநாதன், ஜானகி சுரேஷ், மேக் மணி, சிவம், டென்னிஸ் இம்மானுவேல் ஆகியோருடன் மற்றும் பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இயக்குநர் – துவாரக் ராஜா, தயாரிப்பாளர் – மதுசூதனன், இசை – ராஜ் குமார் அமல், ஒளிப்பதிவு – மகேஷ் திருநாவுக்கரசு, படத் தொகுப்பு – முனீஸ், கலை இயக்கம் – அருண் குமார்.A., ஆடை வடிவமைப்பு – அகிலன் ராம், டிஐ – ப்ரிசம் & பிக்சல்கள் Prism & Pixels, பத்திரிகை தொடர்பு –  சதீஷ் AIM, விஷுவல் எஃபெக்ட்ஸ் – ஜெகன், டப்பிங் – ஜி ஸ்டுடியோஸ், ஒலி வடிவமைப்பு – ராஜ்சேகர்.K (ரெசனன்ஸ் ஸ்டுடியோ), மிக்சிங் – RT ஸ்டுடியோஸ்.

இயக்குநர் துவாரக் ராஜா இயக்கத்தில், இளம் திறமையாளர்களின் நடிப்பில், குடும்ப உறவுகளின் பின்னணியில் ஒரு புதுமையான கேங்ஸ்டர் ஆக்சன் படமாக இந்தப் பரோல் படம் உருவாகியுள்ளது. 

சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டார், மேலும் டிரெய்லரில் கதைக்கு அவர் வாய்ஸ் ஓவரும் தந்திருந்தார்.

இந்த டிரெய்லரில் படத்தின் காட்சியமைப்புகளும், நடிப்பும் ஒரு அழுத்தமிகு தரமான படைப்பாக ‘பரோல்’ இருக்குமென்பதை உறுதி செய்திருந்தது. படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதுடன், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.

இப்படம் குறித்து இயக்குநர் துவாரக் ராஜா பேசும்போது, “எங்களது இந்த பரோல்’ படத்தின் டிரெய்லருக்கு கிடைத்து வரும் வரவேற்பு மிகப் பெரிய மகிழ்ச்சியை தந்துள்ளது.

இப்படம் எங்கள் குழுவினரின் பெரும் கனவு. ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு கதை இருக்கும். ஆனால் ஒரு குடும்பத்திற்குப் பின்னால் உள்ள சொல்லப்படாத, சொல்ல முடியாத ஒரு கதைதான் இது.  

தாய் இறந்த காரணத்தினால் தனக்கு பிடிக்காத அண்ணனை பரோலில் எடுக்கிறான் தம்பி. அவனுக்கும், அவன் அண்ணனுக்கும் உள்ள பிரச்சனைகளும், அதைச் சுற்றி நடக்கும் பரபரப்பான சம்பவங்களுமே இப்படம்.

இது குடும்ப பின்னணியில் நடக்கும் எமோஷனல் கதை. ஆனால், வலுவான ஆக்சனும், பரபரப்பான திரைக்கதையும் உள்ளது. மிக அழுத்தமான ஒரு ஆக்சன் படமாகவும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் மகிழ்விக்கும் படமாகவும் இருக்கும்.

இப்படத்திற்கு குரல் தந்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு நன்றி. டிரெய்லரில் மட்டுமல்ல படத்திலும் அவர் வாய்ஸ் ஓவர் தந்துள்ளார்.  படம் முடித்தவுடனே அவரிடம் காட்டினேன். படம் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அப்போது “நீங்கள் படத்தின் ஆரம்பத்தில் குரல் தந்தால் நன்றாக இருக்கும்” என்றேன். உடனடியாக ஒப்புக் கொண்டு அவரின் கடின வேலைகளுக்கிடையில் செய்து தந்தார். அவருக்கு மிகப் பெரிய நன்றிகள்.

இப்படத்தின் நடிகர்களும், தொழில் நுட்ப கலைஞர்களும் படத்திற்கு மிகப் பெரிய தூணாக இருந்து உழைத்துள்ளார்கள். அவர்களுக்கும் இந்நேரத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறேன். இப்படம் கண்டிப்பாக அனைவரையும் திருப்திப்படுத்தும் புதுமையான படமாகவும், தமிழ் சினிமாவில் ஒரு அழுத்தமான படைப்பாகவும் இருக்கும்..” என்றார்.

இப்படத்தின் டிரெய்லர் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், படத்தின் திரையரங்கு வெளியீட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு, விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

 
Our Score