full screen background image

உஷ்.. அப்பாடா.. ஓய்ந்தது விஜய்-அமலாபால் கல்யாண சர்ச்சை..!

உஷ்.. அப்பாடா.. ஓய்ந்தது விஜய்-அமலாபால் கல்யாண சர்ச்சை..!

எப்படியோ.. கட்டக் கடைசியாக தங்களது திருமணத்தை தாங்களே முன் வந்து அறிவித்துவிட்டார்கள் திரையுலகக் காதலர்களான இயக்குநர் விஜய்யும், அவரது காதலியும்,  வருங்கால மனைவியுமான நடிகை அமலாபாலும்..!

இவர்களின் காதலுக்காக வரிந்து வரிந்து எழுதி, கல்யாணத் தேதியைக்கூட முன்கூட்டியே சொல்லி நிச்சயத்தார்த்தம் எங்கே.. திருமணம் எப்படி என்பதுவரையிலும் பத்திரிகையாளர்களே விசாரித்து விசாரித்து எழுதி மிகவும் டயர்டாகிவிட்டார்கள். இன்னொரு தடவையும் இதே விஷயத்தை எழுதும் நிலைமை வரக்கூடாதுடா சாமி என்று வேண்டிக் கொண்டும் இருந்தார்கள். நல்லவேளையாக இன்றைக்கு அதற்கொரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்கள் காதலர்கள்.

இன்று காலை பென்ஸ் பார்க் ஹோட்டலில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த காதலர்கள் இருவரும், “வரும் ஜூன் 12-ல் நடக்கவிருக்கும் கல்யாணத்துக்கு அவசியம் தவறாமல் குடும்பத்தோட வந்திருங்க…” என்று சொல்லி அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் தனித்தனியே திருமண பத்திரிகைகளை கொடுத்து வரவேற்றார்கள்.

“காதல் எப்படி உருவானது..?”, “யார் முதலில் ஐ லவ் யூ சொன்னது..?” என்கிற சம்பிரதாயமான கேள்விகளெல்லாம் வீசப்பட்டபோது, “எல்லாம் உங்களாலதான்..” என்று மறைமுமாகவே பதில் சொன்னார் இயக்குநர் விஜய்.

“பர்ஸ்ட் அமலாவோட ஒரு பிரெண்டாத்தான் பழகிட்டிருந்தேன். நீங்கதான் எங்க ரெண்டு பேருக்கும் இடைல லவ்வுன்னு இல்லாத ஒண்ணை இருக்குற மாதிரி எழுதிட்டீங்க.. அதைப் படிக்கப் படிக்க.. ஏதோ லவ் வந்த மாதிரி ஆயிருச்சு.. எல்லாரும் கல்யாணம் பண்ணிட்டு பிரெண்ட்ஸாவாங்க. நாங்க பிரெண்ட்ஸா இருந்து லவ் பண்ணினோன். என் தோழியைத்தானே நான் லவ் பண்ணினேன்.. அந்த வகையில் ஐ ஆம் ஹேப்பி..” என்றார்  இயக்குநர் விஜய்.

“எப்போ, எங்கே ஹனிமூன்..?” என்ற கேள்விக்கு “சைவம் படத்தோட ரிலீஸ் வேலைகள் நிறைய இருக்கு. அதை ரிலீஸ் பண்ணிட்டுத்தான் மத்த வேலையெல்லாம்..” என்றார் விஜய்.

“எத்தனை பிள்ளைக பெத்துக்கப் போறீங்க…?” என்று அமலாபாலிடம் அணுகுண்டாக கேள்வியை வீச.. பட்டென்று சுதாரித்த அமலா, “நீங்களே சொல்லுங்க.. எத்தனை பெத்துக்கலாம்…?” என்று எதிர்க்கேள்வி கேட்டார் அமலாபால். இதையும் கேட்டுவிட்டு, “எப்படிங்க.. இப்படியெல்லாம் கேக்குறீங்க..?” என்று செல்லமாக சிணுங்கவும் செய்த அமலாபாலின் முகம் வெட்கத்தில் சிவந்தது..!

“கல்யாணத்திற்கு வருபவர்கள் அன்பளிப்போ, பொக்கேக்களோ கொடுக்க வேண்டாம்…” என்று அன்போடு கேட்டுக் கொண்டுள்ளார்கள் மணமக்கள்.. அதற்கு பதிலாக Ability Foundation என்னும் உடல் ஊனமுற்றோர் சமூக சேவை மையத்திற்கு தங்களால் ஆன நிதியை அன்பளிப்பாக கொடுத்து உதவும்படி கேட்டுக் கொண்டுள்ளார்கள்..! நல்ல முடிவு.. சிறந்த அணுகுமுறை..

மணமக்கள் எல்லா வளமும் பெற்று நீடுழி வாழ வாழ்த்துகள்..!

Our Score