full screen background image

விஜய்யின் 67-வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது..!

விஜய்யின் 67-வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது..!

7 ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பு நிறுவனமான நாங்கள், எங்களின் மதிப்புமிக்க அடுத்தத் திட்டத்தின் அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக உங்களிடம் கொண்டு வருவதில் மகிழ்ச்சியடைகிறோம்.

‘மாஸ்டர்’ மற்றும் ‘வாரிசு’ ஆகிய படங்களின் பிளாக் பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து, மூன்றாவது முறையாக தளபதி விஜய் சாருடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறோம்.

தற்காலிகமாக ‘தளபதி 67’ என்று பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தை ‘மாஸ்டர்’ இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். எஸ்.எஸ்.லலித் குமார் தயாரித்துள்ளார். மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து தயாரித்துள்ளார்.

இதன் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2-ம் தேதியன்று தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

தளபதி விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் அவர்களின் முந்தைய வெளியீடான ‘மாஸ்டர்’ வெற்றிக்குப் பிறகு மீண்டும் இவர்கள் இந்தப் படத்திற்காக இணைந்துள்ளனர். 

‘கத்தி’, ‘மாஸ்டர்’ மற்றும் ‘பீஸ்ட்’ ஆகிய படங்களில் சார்ட் பஸ்டர் ஆல்பங்களை வழங்குவது தவிர, ‘தளபதி 67’ என்பது ‘ராக் ஸ்டார்’ அனிருத் ரவிச்சந்தரின் நான்காவது கூட்டணியாகும்.

விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். இன்னொரு ஹீரோயினாக பிரியா ஆனந்த் நடிக்கிறார். மேலும் வில்லன்களாக சஞ்சய் தத், அர்ஜூன், மிஷ்கின், கெளதம் மேனன், மன்சூரலிகான், மேத்யூ தாமஸ், சாண்டி மற்றும் பலரும் நடிக்கின்றனர்.

‘தளபதி 67’ படத்தின் தொழில் நுட்பக் குழு விவரங்கள் :

ஒளிப்பதிவு – மனோஜ் பரமஹம்சா, சண்டை இயக்கம் – அன்பறிவு, படத் தொகுப்பு – பிலோமின் ராஜ், கலை இயக்கம் – என்.சதீஸ் குமார், நடன இயக்கம் – தினேஷ், வசனம் – லோகேஷ் கனகராஜ், ரத்ன குமார் & தீரஜ் வைத்தி, நிர்வாகத் தயாரிப்பு – ராம்குமார் பாலசுப்ரமணியன்.

படக் குழுவினர் அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக காஷ்மீருக்கு நாளை தனி விமானத்தில் புறப்படுகின்றனர். காஷ்மீரில் சுமார் ஒரு மாத காலம் படப்பிடிப்பு நடக்கவுள்ளது.

Our Score