விஜய்யின் 65-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும் என்று விஜய் ரசிகர்கள் ஆவலுடன் கேட்டுக் கொண்டேயிருக்கிறார்கள்.
இதற்கான பதிலை அந்தப் படத்தில் நடன இயக்குநராகப் பணியாற்றுவதற்காக ஒப்பந்தமாகியுள்ள நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் தெரிவித்துள்ளார்.
தான் இந்தப் படத்தில் நடன இயக்குநராகப் பணியாற்ற ஒப்பந்தமாகியுள்ளதாக ஜானி மாஸ்டர் தனது டிவீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அந்தச் செய்தியில், “தளபதி விஜய் மற்றும் இயக்குனர் நெல்சன் ஆகியோர் என்னை நம்பி இந்த படத்தில் ஒப்பந்தம் செய்ததற்கு மிகப் பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்குக் கிடைத்த இந்த வாய்ப்பை நான் சரியாக பயன்படுத்துவேன்.
இந்தப் படத்தின் பாடல்களுக்கான ரிகர்சல் ஏப்ரல் 24-ம் தேதி துவங்கும். மே 3-ம் தேதி முதல் 9-ம் தேதி வரையிலும் பாடல் காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெறும்…” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆக, விஜய் ரசிகர்கள் மே மாதம்வரையிலும் காத்திருக்கத்தான் வேண்டும்..!