full screen background image

விஜய்யின் 61-வது படத்தின் பர்ஸ்ட் லுக் விஜய்யின் பிறந்த நாளன்று வெளியாகிறது..!

விஜய்யின் 61-வது படத்தின் பர்ஸ்ட் லுக் விஜய்யின் பிறந்த நாளன்று வெளியாகிறது..!

இளைய தளபதி விஜய்யின் 61-வது படத்தை இயக்குநர் அட்லி இயக்கி வருகிறார். இந்தப் படம் தேனாண்டாள் பிலிம்ஸின் 100-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விஜய்யின் 61-வது திரைப்படம் பலத்த எதிர்பார்ப்புகளுடன் தயாராகி வருவது அனைவரும் அறிந்ததே.

மறைந்த இயக்குநர் இராமநாராயணனின் ஆசியுடன் அவரது மகன் முரளி ராமசாமி தயாரித்து வரும் இந்த திரைப்படத்தில் விஜய்யுடன் எஸ்.ஜே.சூர்யா, காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன், வடிவேல், கோவை சரளா, சத்யன் ஆகியோருடன் சத்யராஜ் மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

ஏ.ஆர்.ரகுமான் இசையில் கவிஞர் விவேக் பாடல்கள் எழுத ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவையும், ரூபன் படத் தொகுப்பையும், அனல் அரசு சண்டை பயிற்சியையும், விஜயேந்திரபிரசாத் மற்றும் ரமணகிரி வாசன் இருவரும் திரைக்கதையையும், ஷோபி நடன பயிற்சியையும் கவனிக்கின்றனர். இயக்குநர் அட்லீ இப்படத்தை எழுதி, இயக்கி வருகிறார்.

இந்தப் படத்திற்காக சென்னையில் பிரம்மாண்டமான பல அரங்குகள் அமைக்கப்பட்டு அதில் முக்கிய நடிகர் நடிகையர் பங்கு பெறும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இதன் முக்கியமான பல காட்சிகள் ஐரோப்பாவிலும் படமாக்கப்படவுள்ளன.

இப்படத்தின் FIRST LOOK இளைய தளபதி விஜய்யின் பிறந்த நாளான ஜுன் மாதம் 22-ம் தேதி வெளியிடப்பட இருக்கிறது.

இதன் இசை வெளியீட்டு விழாவை ஆகஸ்ட் மாதம் பிரம்மாண்டமாக நடத்த ஆயத்த வேலைகள் நடைபெற்று வருகின்றன.

Our Score