வித்யாபாலன். ஹிந்தி படவுலகின் தற்போதைய கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்.. ஹீரோயின் ஓரியண்ட்டட் கதைகளுக்கு அம்மணியைவிட்டால் வேறு ஆளில்லை என்ற நிலையில் திருமணமான பின்பும் அதே வேகத்துடன் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
‘தி டர்ட்டி பிக்சர்’, ‘கஹானி’ ஆகிய படங்களில் இவருடைய நடிப்புை பார்த்தவர்கள் தனித்த ஹீரோயின்கள் வேடத்திற்கு இவரைத்தான் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
வரும் ஜூலை 4-ம் தேதி வித்யாபாலன் நடித்திருக்கும் ‘Bobby Jasoos’ என்ற திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் ஒரு அதிசய சாதனையைச் செய்திருக்கிறார் வித்யாபாலன். இந்தப் படத்தில் மொத்தம் 12 விதமான கெட்டப்புகளில் தோன்றுகிறாராம். அத்தனை கேரக்டர்களும் ஆண் கேரக்டர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
‘தசாவதாரம்’ தமிழ்ப் படத்தில் கமல்ஹாசன் பத்து கேரக்டரில் நடித்து அசத்தியிருந்தார். ஆனால் இப்போது அதை மிஞ்சும் அளவிற்கு வித்யாபாலன், இந்தப் படத்தில் 12 விதமான கேரக்டர்களில் நடித்திருக்கிறார்.
பிச்சைக்காரர் முதல் ஜோசியக்காரன்வரை விதவிதமான கேரக்டரில் நடிப்பதற்காக அவருக்கு மொத்தம் 122 வகையான ஸ்க்ரீன் டெஸ்ட் எடுத்து பார்க்கப்பட்டதாம்.
இத்திரைப்படத்தில் வித்யாபாலனுடன் அலி பாசல், கிரண்குமார், அர்ஜான் பாஜ்வா, அனுப்ரியா கோயங்கே, ராஜேந்திர குப்தா, சுப்ரியா பட்நாயக் ஆகியோரும் நடித்துள்ளனர்
இன்று வெளியான இந்த படத்தின் டிரைலர் பாலிவுட் படவுலகை பெரும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. டிரைலரில் வித்யாபாலனின் நான்கு கெட்டப்புக்கள் மட்டுமே இருப்பதாகவும், மீதி கேரக்டர்களை படத்தில் மட்டுமே பார்க்க முடியும் என்கிறார் இயக்குநர் Samar Shaikh.
படத்தின் டிரெயிலர் இதோ :