‘விதி மதி உல்டா’ படத்தின் ஒரு பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் இன்று வெளியிட்டார்.
இந்தப் படத்தில் டேனியல் பாலாஜி, கருணாகரன், சென்ட்ராயன், சித்ரா லட்சுமணன், ஞானசம்பந்தம் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
அஸ்வின் விநாயகமூர்த்தி இசையமைத்திருக்கிறார். கபிலன் பாடல்களை எழுதியிருக்கிறார். இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவியாளராகப் பணியாற்றிய விஜய் பாலாஜி இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
இந்த பாடல் உலகம் முழுவதும் ஒளித்து வெளியாகி சூப்பர் ஹிட்டானது. இந்த பாடலின் முழுமையான வீடியோ விரைவில் வெளியாக உள்ளது. இந்த பாடலில் நாயகன் ரமீஸ் ராஜா, நாயகி ஜனனி ஐயர் இணைந்து ஆடி பாடி நடித்திருக்கிறார்கள்.
இந்தப் படத்தில் இடம் பெற்ற ஜி.வி.பிரகாஷ் பாடிய ‘தாறுமாறா ஒரு பார்வை பார்த்தா.. ஏறுமாறா என்னை அடித்து தூக்க…’ என்ற பாடலின் வீடியோவை நடிகர் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு நிமிட சிங்கள் டிராக் டீசராக இன்று வெளியிட்டார்.
‘விதி மதி உல்டா’ திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.