வெற்றிவேல் கிரியேஷன்ஸ் சார்பீல் தயாரிப்பாளர் பஞ்ச் பாரத், தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘வெற்றிப் பாதை.’
இப்படத்தின் கதாநாயகர்களாக புதுமுகங்கள் சந்தோஷ் மற்றும் விவேக் அறிமுகமாகிறார்கள். இவர்களுக்கு ஜோடியாக ராசி மற்றும் பிரியங்கா கதாநாயகிகளாக அறிமுகமாகின்றனர்.
ஒளிப்பதிவு – அசோக், இசை – ஸ்ருதி குமார், நடனம் – அட்சயா ஆனந்த், ஈஸ்வர் பாபு, மக்கள் தொடர்பு – செல்வரகு, எழுத்து, இயக்கம் – பஞ்ச் பரத்.
படத்தில் நான்கு பாடல்கள் இடம் பெறுகிறது. இதன் படப்பிடிப்பு கடலூர், பாண்டிச்சேரி, சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடைபெறுகிறது.
இந்தப் படத்தின் பூஜை நிகழ்வு சென்னை வளசரவாக்கம் கேரளா ஹவுசில் நேற்று காலை இனிதே நடைபெற்றது.
Our Score