60 நிமிடங்களில் முடியும் வெற்றிமாறனின் ‘விசாரணை’ திரைப்படம்..!

60 நிமிடங்களில் முடியும் வெற்றிமாறனின் ‘விசாரணை’ திரைப்படம்..!

இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டவுடன் அதிர்ச்சியாகவும் இருக்கிறது.. ஆச்சரியமாகவும் இருக்கிறது..!

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் ‘சூதாடி’.  இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது தனுஷுடன் ஏற்பட்ட கருத்து மோதலால் சூதாடி படத்தை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு ‘விசாரணை’ என்ற படத்தை இயக்கப் போய்விட்டாராம் இயக்குநர் வெற்றிமாறன்.

இந்த விசாரணை படத்தையும் தனுஷே தயாரிக்கிறார். இதில் ‘அட்டகத்தி’ தினேஷ் நடிக்கிறாராம்.  ‘பொறியாளன்’ ஹீரோயின் ஆனந்தி இதில் ஹீரோயினாக நடிக்கிறாராம். 

ஆச்சரியமான விஷயம் இதுவல்ல.. இந்தப் படம் வழக்கமான இரண்டு மணி நேரப் படமாக இல்லாமல் 60 நிமிடங்கள்தான் ஓடப் போகிறதாம். அதாவது ஒரு மணி நேரமே ஓடும் அளவுக்கு இருக்கப் போகிறது என்கிறார்கள்.

இது ஹாலிவுட் படங்களைவிட அரை மணி நேரம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு படத்திற்கு இடைவேளைவிடும் நேரத்தில் படத்தையே முடித்து அனுப்பிவிடுவது குறும்படங்களுக்கு ஓகேதான்.. குறும்படங்களை டிவிடியில் பார்த்துக் கொள்ளலாம். இது போன்ற தியேட்டர்களில் பார்க்கும் படங்களையே ஒரு மணி நேரத்தில் குறைத்தால் பார்ப்பவர்களுக்கு ஆர்வம் குறையுமே.. தியேட்டர்காரர்களுக்கும் பிரச்சனையாகும்.. இப்போதே அரை மணி நேரம் கழித்துகூட தியேட்டருக்குள் ரசிகர்கள் சும்மாவாச்சும் வந்து கொண்டிருக்கிறார்கள். வந்து அமர்வதற்குள் இடைவேளைவிட்டால் எப்படியிருக்கும்..?

வெற்றிமாறன்தான் விளக்க வேண்டும்..!

Our Score