‘திமிரு’, ‘காளை’ போன்ற வெற்றி படங்களை இயக்கிய தருண்கோபி நாயகனாக நடித்து, இயக்கியிருக்கும் புதிய படம் ‘வெறி’. தான் இயக்கிய ‘திமிரு’ படத்தின் இரண்டாம் பாகமாக இதனை விளம்பரப்படுத்தியிருக்கிறார்.
இந்தப் படத்தை கோயம்பேடு மார்க்கெட்டின் வியாபாரப் புள்ளியும், தொழிலதிபருமான மு.வெள்ளைப் பாண்டி ஆசியுடன் S.S. PRODUCTION என்ற பட நிறுவனம் சார்பாக எஸ்.சரவணன் தயாரிக்கிறார்.
படத்தில் இன்னொரு நாயகனாக ரமணா நடிக்கிறார். கதாநாயகிகளாக ‘காதல்’ சந்தியாவும் புதுமுக நடிகை ஒருவரும் நடித்திருக்கிறார். மற்றும் சுஜாதா, ‘காதல்’ சுகுமார், முத்துராமன், பரதேசி பாட்டி, கும்கி பாட்டி, மனோஜ், தவசி, ராம்சிங், விருமாண்டி, சேரன்ராஜ், விசித்திரன், தீப்பெட்டி கணேஷன், வைரவன், ரேவதி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். படத்தில் திருப்புமுனையான ஒரு கதாப்பாத்திரத்தில் பங்களா மூர்த்தி நடித்திருக்கிறார்.
ஒளிப்பதிவு – சேவிலோராஜா
இசை – ஸ்ரீகாந்த்தேவா
பாடல்கள் – நா.முத்துகுமார், தருண்கோபி, ஸ்ரீகாந்த்தேவா.
எடிட்டிங் – எல்.வி.கே.தாஸ்
ஸ்டன்ட் – டி.ரமேஷ்
கலை – மணிகார்த்திக்
நடனம் – சுஜாதா, ‘காதல்’ கந்தாஸ்.
தயாரிப்பு நிர்வாகம் – எம்.ஜி.சிவகுமார்
தயாரிப்பு – எஸ்.சரவணன்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – தருண்கோபி.
படம் பற்றி இயக்குநர் தருண்கோபி பேசும்போது, “இது முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் நடக்கும் பக்கா கமர்ஷியல் படம். ‘திமிரு’ படத்தை போலவே இந்த படத்திலும் விறுவிறுப்பான திரைக்கதை இருக்கும். படத்தில் எமோஷனல், காதல், மோதல் என படம் முழுக்க அதிரடியாக இருக்கும். மதுரை, திண்டுக்கல், வத்தலகுண்டு, உசிலம்பட்டி போன்ற ஊர்களில் சந்தர்ப்ப சூழ்நிலையால் ஏற்படும் சம்பவங்கள்தான் படத்தின் திரைக்கதை.
இந்தப் படத்திற்காக 35 நாட்கள் இரவு, பகலாக தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தினோம். சினிமா வரலாற்றிலேயே முதன் முறையாக இந்த படத்தில் நாற்பது பாட்டிகள் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் இந்தப் படம் தயாராகி வருகிறது. விரைவில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது…” என்றார்.