full screen background image

அஜீத்-விஜய் ரசிகர்களுக்கு வெங்கட்பிரபு வேண்டுகோள்..!

அஜீத்-விஜய் ரசிகர்களுக்கு வெங்கட்பிரபு வேண்டுகோள்..!

தலயும், தளபதியும் சும்மா இருந்தாலும் அவங்க ரசிகர்கள் சும்மாவே இருக்க மாட்டாங்க போலிருக்கு..!

‘தளபதியை போட்டு பார்த்திருவோம்’.. என்று ‘தல’யும்.. ‘எவண்டா தலை’ என்று ‘தளபதி’யும் மாறி மாறி சண்டையிட்டது கடந்த காலம். தற்போது இருவர் வீட்டு பிரியாணியையும் இருவருமே பரிமாறிக் கொள்ளும் அளவுக்கு இப்போது நெருங்கிவிட்டார்கள். ஆனால் இது அவர்களது  ரசிகர்களுக்கு தெரிந்தாலும், பாசத்தை அவர்களால் அடக்க முடியவில்லை.

சமீபத்தில் வெளிவந்த ‘மாசு என்கிற மாசிலாமணி’ திரைப்படத்தில் அஜீத் மற்றும் விஜய் படங்களின் காட்சிகளையும், வசனங்களையும் பெயர்களையும் தாறுமாறாகப் பயன்படுத்தியிருந்தார் இயக்குநர் வெங்கட்பிரபு.

இது தொடர்பாக டிவிட்டரில் வேலையில்லாத சில வெட்டி ரசிகர்கள் தங்களது தலைவனை பாராட்டி எழுத்த் துவங்க.. ஆளாளுக்கு முகாரி ராகம் பாடவே ஆரம்பித்துவிட்டார்கள். இதற்காகவே #WhyAjithAndHisFansAreMentals என்று விஜய் ரசிகர்களும், #WhyVijayAndHisFansAreShameless என்று அஜித் ரசிகர்களும் டிவிட்டர் ட்ரெண்டை உருவாக்கி ஜம்முதாவி எக்ஸ்பிரஸ்போல ஓடவிட.. தமிழ் டிவிட்டர் தளமே ரணகளமாகிவிட்டது.

இந்த நேரத்தில் தென்னிந்திய நடிகர்கள் தங்களது ரசிகர்களைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பதாகவும், முட்டாள்தனமாகவும், மூடத்தனமாகவும் இருக்கிறார்கள் தென்னிந்திய ரசிகர்கள் என்று வடக்கத்திய டிவிட்டர்வாசிகள் டிவிட்டரில் எகத்தாளமிட.. இது வேறு பக்கமும் பிரச்சினையைக் கொண்டு சென்றது.

இப்படி இந்தப் பிரச்சினை விமர்சனத்தையும் தாண்டி தனி மனித்த் தாக்குதலாகவும் போய் தென்னிந்திய ரசிகர்களின் மாண்புக்கே களங்கம் விளைவுக்கும் லெவலுக்கு போய் நிற்க.. பிரச்சினைக்கு மூல காரணமான வெங்கட்பிரபு இதில் தலையிட்டு வருத்தப்பட்டுள்ளார். அதுவும் எப்படி..?

“விஜய்-அஜீத் ரசிகர்களே.. தயவு செய்து ஒருவரையொருவர் வெறுப்பதை நிறுத்துங்கள். நாம் எல்லாம் ஒரே குடும்பம், சினிமாக்காரர்கள். அதனால் வெறுப்பை விட்டுவிட்டு சினிமாவை ரசியுங்கள். ரசிகர்களுக்கிடையே விரும்பத்தகாத வார்த்தைகளை வெளியிட்டு ஒரு கசப்புணர்வை வெளியிட்டு வருவது கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை, ரசிகர்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும். இதேநிலை தொடருமானால், கடும் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டிவரும். எதற்கும் ஒரு எல்லை உண்டு..” என்று எச்சரிக்கையுடன் அட்வைஸை வாரி வழங்கியுள்ளார்.

செய்றதையும் செஞ்சுப்புட்டு சமாதானம் வேற பேசுறாருய்யா இயக்குநரு..!

Our Score