full screen background image

வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா..! பிரபலங்கள் பங்கேற்ற பூஜை..!

வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா..! பிரபலங்கள் பங்கேற்ற பூஜை..!

ஒரு படம் முடிவதற்குள் அடுத்தப் படத்தை அறிவிக்கும் வித்தையை நமது நடிகர்கள் நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணங்கள் இல்லாமலில்லை..

அந்த நடிகர் நடித்து வெளி வரும் முதல் படம் ஊத்திக் கொண்டது என்றால் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் தயாரிப்பு நிறுவனத்துக்கோ அல்லது படத்தின் ஹீரோவையே தேடி வருவார்கள்.. இத்தனை கோடி அல்லது இத்தனை லட்சம் நஷ்டம்.. இதில் கொஞ்சம் நீங்களும் பங்கெடுத்துக் கொள்ளுங்கள் என்பார்கள். இதில் தயாரிப்பாளருக்கும், நடிகருக்கும் தார்மீக ரீதியாக பங்களிப்பு இருப்பதால் அதை அவர்கள் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.

பணமாகத் திருப்பிக் கொடுக்கத்தான் யாருக்குமே கசக்குமே..? அப்போதுதான் அடுத்தப் படத்தின் டெக்னிக் பெருமளவுக்கு உதவுகிறது.. “இப்போ நான் நடிச்சிட்டிருக்கிற படம் கிட்டத்தட்ட முடிஞ்சு போச்சு.. அடுத்த மாதம் ரிலீஸாயிரும். அதுல கழிச்சிக்கலாம்.. டோண்ட் வொர்ரி..” என்று சொல்லி அனுப்பி விடுவார்கள்.

இரண்டாவது படத்தின் ரிலீஸீன்போது படத்தின் விலையில் கால்வாசியைக் குறைத்துக் கொண்டு அதே விநியோகஸ்தர்களுக்கு உரிமையைத் தருவார்கள். கொஞ்சமாவது வந்துச்சே என்ற ரீதியில் விநியோகஸ்தர்கள் திருப்திப்பட்டுக் கொண்டு போக வேண்டியதுதான்..!

இப்போது வருடத்திற்கு 3 படங்களாவது செய்ய வேண்டும் என்பது பெரும்பாலான பெரிய ஹீரோக்களின் எண்ணம். அப்போதுதான் தங்களுக்கு மவுசு இருக்கிற காலங்களுக்குள் கொஞ்சமாவது சம்பாதித்து குடும்பத்திற்காக சேர்த்து வைக்க முடியும் என்பது அவர்களது கணிப்பு..

‘பிரியாணி’ ரிலீஸாகி மாதங்களாகிவிட்ட நிலையில் இதோ.. இன்றைக்கு.. தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று.. சித்திரை முதல் நாளில்.. நடிகர் சூர்யா நடிக்க.. வெங்கட் பிரபு இயக்கத்தில் புதிய படத்திற்கு பூஜை போட்டுள்ளார்கள். இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனமே தயாரிக்கிறது.

IMGM8628

இந்த பூஜை நிகழ்ச்சியில் நடிகர் சிவக்குமார், இயக்குநர்கள் பாலா,  ஹரி, சாந்தகுமார், மனோபாலா, பாண்டிராஜ், இசையமைப்பாளர் கங்கை அமரன், நடிகர் ராதாரவி, கார்த்தி, நாசர், கமீலா நாசர், தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் கேயார், திருப்பதி பிரதர்ஸ் சுபாஷ் சந்திரபோஸ், பிரமிட் நடராஜன், பாடலாசிரியர் மதன் கார்க்கி ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

IMGM8629

சூர்யா இப்போது ‘அஞ்சானி’ல் பிஸியாக இருக்கிறார். அது ஒரே ஷெட்யூல் படம் என்பதால் சீக்கிரமாக முடிந்துவிடும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறார் சூர்யா. அது முடிந்தவுடன் வெங்கட்பிரபு.. இதற்கடுத்து உடனுக்குடன் பூஜை.. ஷூட்டிங்குதான்..

வெங்கட்பிரபுவின் படத்தில் யார், யார் நடிக்கப் போகிறார்கள்.. தொழில் நுட்பக் கலைஞர்கள் லிஸ்ட் இன்னமும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. ஒளிப்பதிவு ஆர்.டி.ராஜசேகர், உடைகள் வாசுகி பாஸ்கர் என்பது மட்டும் உறுதியாகியுள்ளது.

வெங்கட்பிரபுவிற்கும், சூர்யாவிற்கும் நமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்..!

Our Score