வருகிறது வேங்கைப்புலி..!

வருகிறது வேங்கைப்புலி..!

லஷ்மி லோட்டஸ் மூவிமேக்கர்ஸின் பி.ஜி.ஆர். பிரசாத் மற்றும் கோவை வேல் பிலிம்ஸ் வேல்முருகன் இருவரும் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘வேங்கைப்புலி’. 

தெலுங்கில் ‘வான்ட்டட்’ என்ற பெயரில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற இந்தப் படம், இங்கே ‘வேங்கைப்புலி’யாக மாறியிருக்கிறது.  

கோபிசந்த் கதாநாயகனாக நடித்திருக்கிறார். தீக்சாசேத் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.  மற்றும் நாசர், பிரகாஷ்ராஜ், பிரமானந்தம் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

சக்ரி இசையமைக்க.. ராஜேஷ்கண்ணா பாடல்களை எழுதியிருக்கிறார். வசனத்தை சத்யம் எழுதியிருக்கிறார். எழுதி இயக்கியிருக்கிறார் ரவி. 

பெற்றோர் சம்பாதித்த பணம், தான் ஜாலியாக வாழ்வதற்கே என்ற குறிக்கோள் கொண்டவரான கோபிசந்த் ஒரு சிலரை கொலை செய்கிறார். அதுவும் காதலுக்காக.

அவருடைய காதலியான தீக்சா சேத் அவருக்குக் கிடைக்க வேண்டுமெனில் சில கொலைகளை செய்ய வேண்டும் என்ற வினோதமான நிபந்தனை விதிக்கப்படுகிறது. அதனை கோபிசந்த் நிறைவேற்றினாலும் அந்தக் கொலைகளுக்கான உண்மையான காரணம் என்ன என்பதுதான் படத்தின் கதையாம்..!

அடுத்த மாதம் படம் திரைக்கு வரவிருக்கிறது..!

Our Score